உலக பொருளாதாரத்தின் முக்கிய புள்ளியாக விளங்கும் இந்தியா: உலக வங்கி

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
உலக பொருளாதாரத்தின் முக்கிய புள்ளியாக விளங்கும் இந்தியா: உலக வங்கி

உலக பொருளாதாரத்தின் முக்கிய புள்ளியாக இந்தியா தொடர்ந்து விளங்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி 6 மாதத்திற்கு ஒருமுறை Global Economic Prospect report எனப்படும் உலக பொருளாதார எதிர்பார்பு அறிக்கையை வெளியிடும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால், ஆசியாவில் இந்திய பொருளாதாரம் தான் வலுவானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2015ம் ஆண்டில் 0.2 சதவிகிதம் என குறைந்துள்ளது. மேலும், 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 0.1 சதவிகிதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், வரும் 2016-17 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 7.8 சதவிகிதமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 7.9 ஆக உயரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் வளர்ச்சி வலுவானதாக இருந்து வருகிறது. இதற்கு கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியும் ஒரு காரணம்.

உலகப் பொருளாதாரம் மந்த நிலையாக இருந்தபோது கூட, இந்தியாவின் நாணய மற்றும் பங்குச் சந்தைகள் நிலையாக இருந்துள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை