பிரணவ்-வுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத் தொகை

நக்கீரன்  நக்கீரன்

பதிவு செய்த நாள் : 6, ஜனவரி 2016 (23:37 IST)

மாற்றம் செய்த நாள் :6, ஜனவரி 2016 (23:37 IST)

பிரணவ்-வுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத் தொகை

மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவரான பிரணவ் தனவாடே (15) பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 1009 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் அவர் 117 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார். அபார சாதனை படைத்த பிரணவின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சாதனை படைத்த பிரணவ்-வுக்குப் பலரும் பரிசுகள் அளித்து வருகிறார்கள். இந்நிலையில், மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பாக பிரனவ்-வுக்கு மாதம் ரூ. 10,000 ஊக்கத் தொகை கிடைக்க உள்ளது. இந்த மாதம் முதல் டிசம்பர் 2021 வரை பிரணவ்-வுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 வழங்கப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

மூலக்கதை