இஸ்லாமியர்களுக்கு எதிராக டென்மார்க்கில் போராட்டம்

NEWSONEWS  NEWSONEWS
இஸ்லாமியர்களுக்கு எதிராக டென்மார்க்கில் போராட்டம்

ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இங்கிலாந்து விரைவில் கிறிஸ்தவ நாடு என்ற நிலையில் இருந்து மாறிவிடும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் பிரான்சில் வாலிபர் ஒருவர் 7 பேரை சமீபத்தில் சுட்டுக் கொன்றார். விசாரணையில் அவர் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவாளர் என்று தெரியவந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் டென்மார்க்கில் திடீரென போராட்டம் நடத்தினர்.

ஆரஸ் நகரில் நூற்றுக்கணக்கானோர் திடீரென திரண்டு இஸ்லாமியத்துக்கு எதிராக கோஷமிட்ட படி ஊர்வலம் சென்றனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு குழுவினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.

இதுதொடர்பாக 80க்கும் அதிகமானோரை கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், டென்மார்க், இங்கிலாந்து, ஜேர்மனி, சுவீடன், போலந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 300க்கும் அதிகமானோர் இஸ்லாமியத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

பேரணி சென்றவர்களை தடுத்து நிறுத்த 2,500க்கும் அதிகமானோர் திரண்டனர். இதனால் மோதல் ஏற்பட்டது. நிலைமை இப்போது கட்டுக்குள் உள்ளது என்றனர்.

மூலக்கதை