‘தங்க மகன்’ நஷ்டத்துக்கு ஈடாக தனு‌ஷின் கால்‌ஷீட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘தங்க மகன்’ நஷ்டத்துக்கு ஈடாக தனு‌ஷின் கால்‌ஷீட்

திரைச்செய்தி Friday, January 1st, 2016

‘தங்க மகன்’ நஷ்டத்துக்கு ஈடாக தனு‌ஷின் கால்‌ஷீட்

தொடர்ந்து வெற்றிப்படங் களையே கொடுத்துக் கொண்டிருந்த தனுஷ் நடித்த ‘தங்க மகன்’ படம் தோல்வியைத் தழுவியுள்ள தாகக் கூறப்படுகிறது. ‘தங்க மகன்’ படமும் தன்னை உயரத்தில் உட்கார வைக்கும் என்ற அவரது நம்பிக்கையுடன் இருந்தார். அவரது எதிர்பார்ப்புக்கு மாறாக தோல்வியைத் தழுவியது அந்தப் படம். ‘விஐபி’, ‘மாரி’ என வசூலில் சக்கைப்போடு போட்ட படங்களை, தனுஷ் கொடுத்து வந்ததால் அவர் ‘வெற்றி நாயகன்’ என்ற பெயதைத் தொடர்ந்து தக்க வைத்திருந்தார்.

வெற்றிப் படத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த தனுஷ், மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் நிறு வனத்துக்கு ‘தங்க மகன்’ படத்தில் நடித்தார். ‘தங்க மகன்’ படத்தைத் தயாரித்த கோபுரம் பிலிம்ஸ், தமிழக தியேட்டர் உரிமையை மட்டும் ஸ்ரீக்ரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்றது.

கோடிக் கணக்கில் செலவு செய்து படத்திற்கு விளம்பரம் செய்தது இந்த தயாரிப்பு நிறுவனம். படம் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் தற்போது ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படு கிறது. தன்னுடைய நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் தனுஷ் தனக்கு கால்‌ஷீட் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறாராம் ஸ்ரீக்ரீன் புரொடக்ஷன்ஸ் அதிபர் சரவ ணன். அவரது நிலைமை யைப் புரிந்து கொண்டு ஒரு படம் நடித்துத் தருவதாகச் சொல்லி இருக்கிறா ராம் தனுஷ்.

மூலக்கதை