“உயரம் ஒரு பிரச்சினையே அல்ல”

தமிழ் முரசு  தமிழ் முரசு
“உயரம் ஒரு பிரச்சினையே அல்ல”

திரைச்செய்தி Friday, December 25th, 2015

ஸ்ரீதிவ்யா

‘மருது’ படத்தில் விஷால் ஜோடியாக நடிக்கும் ஸ்ரீதிவ்யாவிடம், “குள்ளமாக இருக்கும் நீங்கள் எப்படி உயரமான விஷாலுக்கு இணையாக நடிக்கிறீர்கள்?’ என்று ஒரு நிருபர் கேட்டாராம். “இதுவரை என்னோடு நடித்த நாயகர்கள் அத்தனை பேருமே உயரமானவர்கள்தான். ஆனால், திரையில் அந்த குறைபாடு தெரியவே தெரியாது. உயரம் குறைவாக இருப்பது நிச்சயமாக ஒரு நாயகிக்கு பின்னடைவு அல்ல. அளவுக்கு அதிகமான உயரமாக இருப்பவர்களுக்குத்தான் சங்கடம்,” என்று கூறியுள்ளார் ஸ்ரீதிவ்யா.

தமிழில் ‘பென்சில்’, மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் மறுபதிப்பு, ‘காஸ்மோரா’, ‘மருது’ ஆகிய படங்களில் நடிப்பதாக சொல்பவர், தனது நடிப்பில் உருவான ‘நகர்ப்புறம்’, ‘காட்டுமல்லி’ ஆகிய இரண்டு படங்களைப் பற்றி மட்டும் எங்குமே வாய் திறப்பதில்லை. அதுதான் புரியாத புதிராக இருக்கிறது என்று முணுமுணுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உள்ள சில விவரப் புள்ளிகள்.

மூலக்கதை