திரையுலகில் 50வது ஆண்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

தினமலர்  தினமலர்
திரையுலகில் 50வது ஆண்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

திரையுலகில் 50வது ஆண்டில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

15 டிச,2015 - 15:18 IST

எழுத்தின் அளவு:

தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாது பல இந்திய மொழிகளிலும் பல அருமையான பாடல்களைப் பாடி இசை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றிருப்பவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். 1966ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படமான 'ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா' படத்தில் இவரை பாடகராக அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் கோதண்டபாணி. தமிழில் எம்ஜிஆர் நடித்த 'அடிமைப் பெண்' படத்தில் பாடிய 'ஆயிரம் நிலவே வா...' பாடலே முதல் பாடலாக வெளிவந்தது.

அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ பாடல்களை பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார். பல முன்னணி நடிகர்களுக்கும் சிறிய நடிகர்களுக்கும் கூட பாடியிருக்கிறார். இதுவரை சுமார் 40000 பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கிறார் என்பது தனிச் சிறப்பு.

“என் அன்பான வழிகாட்டிகளே, உங்களுக்கு எனது வணக்கம். ஒரு பாடகராக இன்று என்னுடைய 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். இந்த குரலைக் கொடுத்த எனது பெற்றோர்களுக்கும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா படத்தில் எனக்கு திருப்பத்தைக் கொடுத்த கோதண்டபாணி அவர்களுக்கும் எனது குரலை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் பத்மநாபம் அவர்களுக்கும் எனது நன்றி.

எனது தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள், ஒலிப்பதிவாளர்கள், உடன் பாடியவர்கள், நடிகர்கள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள், அனைத்து பத்திரிகையாளர்கள் , என்னுடனே இருக்கும் எனது அன்பான இசை ரசிகர்கள் ஆகியோருக்கும் நன்றி.

நீங்கள் இல்லாமல் நான் இல்லை, இந்தப் பயணத்தில் யாருடைய உணர்வையாவது நான் புண்படுத்தியிருத்தால் தயவு செய்து மன்னித்து விடுங்கள்,” என தன்னுடைய 50வது ஆண்டு பயணத்தை வெற்றிகரமாகத் துவக்கியுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


மூலக்கதை