நடிகர் விஷால் மற்றும் கார்த்தி குழுவினர் அறிக்கை

கதிரவன்  கதிரவன்
நடிகர் விஷால் மற்றும் கார்த்தி குழுவினர் அறிக்கை

வெள்ள நிவாரண நிதிக்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஹைதராபாத்தில் இருந்தும் பல்வேறு நிவாரண பொருட்கள் வந்து கொண்டு இருக்கின்றது.

வடசென்னை, கடலூர், முடிச்சூர் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி ஆகும். உங்களால் முடிந்த உதவியை இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்களால் முடிந்த அளவிற்கு இப்போது அதிகம் தேவைப்படும் பொருட்களான பால்மா, சானீட்டேரி நாப்கின், குடிநீர், போர்வை ஆகியவற்றை நீங்கள் அவர்களுக்கு கொடுத்து உதவலாம்.

இவை தான் அப்பகுதி மக்களுக்கு முக்கிய தேவை. தேவையான அளவிற்கு அப்பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் தற்போது கிடைத்து வருகிறது. நடிகர் மற்றும் குறிப்பிட்டவர்கள் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று இல்லை. இப்போது உதவி வரும் மக்கள் மற்றும் இளைஞர்கள் போல் மக்கள் ஒவ்வொருவரும் முன்வந்து நிச்சயம் உதவ வேண்டும்.

நாங்கள் லேடி ஆண்டாள் பள்ளியை மைய பகுதியாக கொண்டு இயங்கி வருகிறோம். எல்லா பொருட்களும் இங்கே இருந்து வருகின்றது. இங்கே இருந்து தான் மற்ற இடங்களுக்கும் செல்கிறது. ஆதலால் உங்களிடம் எந்த பொருட்கள் இருந்தால் லேடி ஆண்டாள் பள்ளிக்கு தாங்கள் அனுப்பி வைக்கலாம். நாங்கள் “ரெஸ்க்யு சென்னை” என்ற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறோம். எனவே அனைவரும் உடனே முன்வந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார் நடிகர் விஷால் மற்றும் கார்த்தி குழுவினர்.

நடிகர் விஷால், கார்த்தி மற்றும் குழுவினர் இன்று மாலை கடலூரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.

தகவல் : சென்னை அலுவலகம்

2015-12-06

மூலக்கதை