பாகிஸ்தான் லாகூரில் பாதுகாப்பு மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம்:ராஜீவ் சுக்லா

4 TAMIL MEDIA  4 TAMIL MEDIA
பாகிஸ்தான் லாகூரில் பாதுகாப்பு மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம்:ராஜீவ் சுக்லா

Saturday, 21 November 2015 08:20

பாகிஸ்தான் லாகூரில் பாதுகாப்பு மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளை அச்சமின்றி நடத்தலாம் என்று பிசிசிஐ உறுப்பினரான ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிடுவது என்பது இழுபறியாக நீடித்து வருகிறது. எனவே, இதுக்குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ராஜீவ் சுக்லா ஆலோசனை தெரிவித்துள்ளார். அதன் படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் போட்டிகளை நடத்த அரபு, அமீரக நாடுகளை நம்பி இருக்காமல் பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள மைதானத்தை மேம்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தமது கிரிக்கெட் தொடர்களுக்கு அரபு அமீரக நாடுகளையே நம்பி இருந்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார். எனவே, பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டுக்களை விளையாட தகுந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்றும், இதையடுத்து பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் போட்டிகளை நடத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் மேலும் அவர் கூறியுள்ளார்.

அதோடு லாகூரில் ஒட்டு மொத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்து பின்னர் அங்கு கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாமே என்று ஆலோசனை கூறியுள்ளார்.

 

மூலக்கதை