இந்தியாவில் அறிமுகமான ஸ்மார்ட் மின்சார விளக்கு!

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
இந்தியாவில் அறிமுகமான ஸ்மார்ட் மின்சார விளக்கு!

ஸ்மார்ட்கைப்பேசி, ஸ்மார்ட்வாட்ச் பட்டியலில் ஸ்மார்ட் மின் விளக்கும் இடம்பிடித்துள்ளது.

'ஸ்டார்ட்அப்' என்ற நிறுவனம் இந்தியாவில் 'ஸ்மார்ட் பல்பு'களை அறிமுகம் செய்திருக்கின்றது.

கைப்பேசி செயலி மூலம் இயக்கக் கூடிய ஸ்மார்ட் பல்பு தான் ஐ.ஓ.டி.ஏ லைட். 'க்யூப் 26' எனும் இந்திய நிறுவனம் இந்த மின் விளக்கினை வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் பல்பு சுமார் 15,000 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும் என்பதோடு, இந்த விளக்கு 16 மில்லியன் நிறங்களில் ஒளிரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், மொபைல் போனில் அழைப்பு அல்லது குறுந்தகவல் ஏதும் வந்தால் வித்தியாசமான நிறம் மூலம் எச்சரிக்கை செய்யும்.

500 லூமென்ஸ் ப்ரைட்னஸ் வழங்கும் 7 வாட்ஸ் பல்பு இந்தியாவில் ரூ.1,499க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மூலக்கதை