விண்ணை முட்டும் பருப்பு வகைகளின் விலை! பொது மக்கள் அவதி

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
விண்ணை முட்டும் பருப்பு வகைகளின் விலை! பொது மக்கள் அவதி

தமிழகத்தில் பருப்பு வகைகளின் விலை சரமாரியாக உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் துவரம் பருப்பு விலை கிலோ ரூ 180 முதல் 200 வரை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வுக்கு காரணம் பருப்பு வகைகளின் உற்பத்தி வெகுவாகக் குறைந்துவிட்டதுதான் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டுமே கிலோவுக்கு ரூ 30 வரை பருப்பு வகைகள் விலை உயர்ந்துள்ளது.

90 ரூபாய்க்கும் கீழிருந்த பாசிப் பயரின் விலையும் ரூ.132 ஆக உயர்ந்துள்ளது. மைசூர் பருப்பு என்பதன் விலை ரூ.96ல் இருந்து 110 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும், சில நாட்களில் பருப்பு வகைகளை தேவைக்கேற்ப கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை