சிங்கப்பூர் டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் விலை 3.03-ஆக சரிவு

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
சிங்கப்பூர் டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் விலை 3.03ஆக சரிவு

 

சிங்கப்பூர், ஆகஸ்டு 25-  சிங்கப்பூர் டாலருக்கு நிகராக மலேசிய ரிங்கிட்டின் விலை இன்று மீண்டும் சரிந்தது.

இன்று காலை மணி 8.03 நிலவரப்படி, 1 சிங்கப்பூர் டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் விலை 3.0303-ஆக சரிந்தது.

ரிங்கிட்டின் மதிப்பு சரிவு கண்டதையடுத்து, நேற்று திங்கட்கிழமை பணப்பரிமாற்ற முகவரிடம் தங்கள் பணத்தை மாற்றுவதில் முனைப்பு காட்டினர்.

 

முன்னதாக, நேற்று, மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 1.4% வீழ்ச்சியடைந்து, 1 சிங்கப்பூர் டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் விலை 3.0166-ஆக வீழ்ச்சிகண்டது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை