மும்பை பங்குச் சந்தை பயங்கர வீழ்ச்சி :ரூ.7 லட்சம் கோடி இழப்பு

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
மும்பை பங்குச் சந்தை பயங்கர வீழ்ச்சி :ரூ.7 லட்சம் கோடி இழப்பு

 டெல்லி, 24 ஆகஸ்டு – சீனா பங்குச் சந்தை வீழ்ச்சியால், இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று படு வீழ்ச்சி கண்டது.

மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தின் முடிவில், 1624 புள்ளிகள் சரிவைக் கண்டது. இந்தியப் பங்குச் சந்தையில் இது 3-வது வீழ்ச்சியாகும். 

 இன்றைய ஒரு நாளில் மட்டும் முதலீட்டாளர்களுக்குச் சுமார் ரூ 7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாக இது கருதப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 66 காசுகள் சரிந்து ரூ.66.50 எனும் நிலையை எட்டியது.  கடந்த சில வாரங்களாக, சீனாவின் யுவான் மதிப்பு கடுமையாகச் சரிந்ததாலும், உலகளவில் டாலரின் மதிப்பு அதிகரித்திருப்பதாலும், ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மூலக்கதை