இரண்டாவது முனையத்திற்கு மாறினால் சுற்றுலாத் துறை பாதிக்கும்- டோணி

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
இரண்டாவது முனையத்திற்கு மாறினால் சுற்றுலாத் துறை பாதிக்கும் டோணி

கோலாலம்பூர், ஆகஸ்டு 13- சபா, கோத்தாகினபாலு  விமானநிலையத்தின் இரண்டாவது முனையத்திலிருந்து  1-வது முனையத்திற்கு மாற ஏர் ஆசியா நிறுவனம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. அவ்வாறு, 1-வது முனையத்திற்கு தாங்கள் மாறினால் சுற்றுலா துறை பெரிதும் பாதிக்கும் என ஏர் ஆசியாவின் தலைமைச் செயல்முறை அதிகாரி டான் ஶ்ரீ டோணி பெர்னான்டஸ் தெரிவித்துள்ளார்.

“முதலாவது விமான முனையத்திற்கு நாங்கள் மாறினால், அது  பயணிகளுக்கு அதிக செலவை ஏற்படுத்தும். இதனால்  சுற்றுலா சபா மாநிலத்தின் சுற்றுலா துறை பெரிதும் பாதிக்கும்” என டான் ஶ்ரீ டோணி பெர்னான்டஸ் தெரிவித்தார்.

 

 “சபா மாநிலத்தில், சுற்றுலா துறைக்கு  மிகப் பெரிய போட்டி உள்ளது. எங்களை முதலாவது  முனையத்திற்கு மாற்றுவதோடு, விமான நிலைய வரியை 35  ரிங்கிட்டாக அதிகரித்தால், இங்குள்ள சுற்றுலா துறையை நீங்கள் கொல்வது போலாகிவிடும்” என டேவிட் ஃபோஸ்டரை ஏர் ஆசியாவின் முதல் அனைத்துலகத் தூதராக அறிவித்தப்பின் அவர் செய்தியாளர்கள் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார். 

 

 

மூலக்கதை