புகழ்ப்பெற்ற பி.எம்.டபுள்யு காரின் பெண் வாரிசு ஜோஹேனா குவந்த் மரணம்

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
புகழ்ப்பெற்ற பி.எம்.டபுள்யு காரின் பெண் வாரிசு ஜோஹேனா குவந்த் மரணம்

 

 பேட் ஹோம்பர்க், 6 ஆகஸ்டு -  உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களின் பட்டியலில் 11-வது  இடத்தைப் பிடித்த பி.எம்.டபுள்யுவின் பெண் வாரிசு ஜொஹேனா குவந்த் தமது 89-வது வயதில் காலமானார்.

 பி.எம்.டபுள்யு நிறுவனத்தின் முன்னேற்றத்திற்குப் பெரும் பெரும் பங்கு வகித்தவர் இவர் .ஜெர்மனியின் பேட் ஹோம்பர்க் நகரில் ஜொஹேனா காலமானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1926-ஆம் ஆண்டு பிறந்த ஜோஹெனா புருண், 1950-ஆம் ஆண்டுகளில் தொழிலதிபர் ஹெர்பர்ட் குவந்தின் காரியதரிசியாக முதலில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர், ஹேர்பர்ட்டின் தனிப்பட்ட உதவியாளர் ஆனார். ஜோஹெனா 1960-ஆம் ஆண்டு ஹெர்பர்ட் குவந்த்தையே மணமுடித்தார். 

 1982-ஆம் ஆண்டு கணவர் இறந்த பின்னர், பி.எம்.டபுள்யு நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான ஜோஹெனா, அந்நிறுவனத்தின், 16.7  சதவிகித பங்கின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த டிசம்பர் மாதம் ஜோஹெனா குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 4370 கோடி டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. 

மூலக்கதை