மாலத்தீவுக்கான பயணத்தைத் அக்டோபரில் தொடங்குகிறது ஏர் ஆசியா

வணக்கம் மலேசியா  வணக்கம் மலேசியா
மாலத்தீவுக்கான பயணத்தைத் அக்டோபரில் தொடங்குகிறது ஏர் ஆசியா

கோலாலம்பூர், 21 ஜூலை- ஏர் ஆசியா எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்கு மூன்று முறை மாலத்தீவுக்கான இருவழி போக்குவரத்தைத் தொடங்கவிருக்கிறது.

 மாலத்தீவுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள், தங்கள் இருக்கைகளை இப்போதே airasia.com என்ற அகப்பக்கத்தின் வழி ஆகக் குறைந்த கட்டணமாக 169 ரிங்கிட்டுக்குள் பதிவு செய்யலாம் என இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

“எதிர்வரும் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் 2016-ஆம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதி வரைக்குமான சிறப்பு சலுகை பயணப் பதிவு காலம் இம்மாதம் ஜூலை 26-ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.

 

மாலத்தீவுக்கான இந்த பயண அட்டவணை, மலேசியா மட்டுமல்லாமல் தென் கொரியா, ஜப்பான், சீனா, ஹாங்கோங், தாய்லாந்து, ஆஸ்திரேலியா,  ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் Fly Thru Air Asia சேவை மூலம் சென்று வர முடியும் என்றும் ஏர் ஆசியா தெரிவித்துள்ளது. 

மூலக்கதை