விம்பிள்டன்:மூன்றாவது முறையாக யாக்கோவிச் வெற்றி

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
விம்பிள்டன்:மூன்றாவது முறையாக யாக்கோவிச் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை செர்பியாவின் நோவாக் யாக்கோவிச் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை 7-6(7-1),6-7(10-12),6-4,6-3 எனும் செட்கணக்கில் வென்றார்.

மிகவும் பரபரப்பு மிகுந்த இந்தப் போட்டி சிறிது நேரம் மழையின் காரணமாகத் தடைபட்டது.

நோவாக் யாக்கோவிச் மூன்றாவது முறையாக விம்பிள்டன் ஆடவர் பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன்னர் அவர் கடந்த 2011 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இப்பட்டத்தை வென்றிருந்தார்.

ஆட்டத்தில் முதல் இரண்டு செட்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சென்றன. முதல் செட்டை யாக்கோவிச் கைப்பற்றினாலும், இரண்டாவது செட்டில் பின்தங்கியிருந்த நிலையிலிருந்து மிகவும் அபாரமாக மீண்டுவந்த ஃபெடரர் அதை 7-6 எனும் செட் கணக்கில் வென்றார்.

அதிலும் கடைசி செட்டை டை-பிரேக்கர் முறையில் 12-10 எனும் கணக்கில் வென்றார்.

ஆனாலும் அந்த உத்வேகத்தை அடுத்த இரண்டு செட்களில் அவரால் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

இரண்டாவது செட்டை இழந்த நிலையில் அடுத்த இரண்டு செட்களையும் மிகவும் ஆளுமையுடன் ஆடி எளிதாக வென்றார் நோவாக் யாக்கோவிச்.

இந்த இறுதி ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரர் வென்றிருந்தால், இதுவரை யாரும் செய்திராத வகையில் எட்டாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றவர் எனும் பெருமையைப் பெற்றிருப்பார்.ஆனால் அந்த வாய்ப்பை அவர் நழுவவிட்டார்.

மூலக்கதை