இத்தாலி தூதரக அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல்: தீவிரவாதிகளின் சதி காரணமா?

NEWSONEWS  NEWSONEWS
இத்தாலி தூதரக அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல்: தீவிரவாதிகளின் சதி காரணமா?

எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் இத்தாலி நாட்டுக்குரிய துணை தூதரகம் அமைந்துள்ளது.

தூதரக அலுவலகத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தும், இன்று(11.07.15) காலை கார் ஒன்று தூதரக அலுவலகத்திற்கு வந்துள்ளது.சிறிது நேரத்திற்குள், காரில் வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு பலத்த ஓசையுடம் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில், தூதரக அலுவலகத்தின் முகப்பு பகுதி முழுவதுமாக சேதமடைந்தது.மேலும், இந்த வெடி குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும், 2 பொலிசார் மற்றும் 3 பொது மக்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த விபத்து குறித்து பேசிய எகிப்து நாட்டு சுகாதார துறை அதிகாரியான Hossam Abdel Ghaffar, கார் வெடி குண்டு தாக்குதல் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளதா என விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.வெடிகுண்டு தாக்குதலில் இறந்த நபர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தவரா என உறுதியாக தகவல் கிடைக்கவில்லை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான முகமது மொர்ஸியை பதவியிலிருந்து நீக்கிய பிறகு, அந்நாட்டில் தொடர் வன்முறை சம்பவங்கள் நடைப்பெற்று வருகிறது.கடந்த 2013ம் ஆண்டு நிகழ்ந்த வன்முறையில், சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை