கால்பந்து உலகக் கோப்பை அனுசரணையாளர் கவலை

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
கால்பந்து உலகக் கோப்பை அனுசரணையாளர் கவலை

கால்பந்து விளையாட்டுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தாம் ஃபிஃபா அமைப்புடனான தமது அனுசரணை ஒப்பந்தத்தை மீளாய்வு செய்யப்போவதாக கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளுக்கான முக்கிய அனுசரணை நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில், உலக கால்பந்து கட்டுப்பாட்டு அமைப்பான ஃபிஃபாவின், பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து ”விசா” நிறுவனத்தின் இந்த அறிக்கை வந்துள்ளது.

நடந்துள்ள நிகழ்வுகளால் தாம் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளதாக ”விசா” நிறுவனம் கூறியுள்ளது.

ஏனைய பல விளையாட்டு அனுசரணையாளர்களும் இது குறித்து பேசியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள், உலகக்கோப்பையின் நோக்கத்தையும் கொள்கையையும், சிதைப்பதாக கொக்கோ கோலா நிறுவனம் கூறியுள்ளது.

கார் தயாரிப்பாளர்களான ஹையுந்தாய் நிறுவனம், ஃபிஃபா அதிகாரிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் பெரும் கவலையை தருவதாக கூறியுள்ளது.

மூலக்கதை