அமெரிக்காவில் கார் விபத்தில் தகப்பனாரை இழந்த 9 வயது சிறுமிக்கு நடுஇரவில் நேர்ந்த சோகம்

CANADA MIRROR  CANADA MIRROR

அமெரிக்க லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண சியெரா நெடுஞ்சாலையில், ஹாலிவுட் நகரை சேர்ந்த அலிஜேந்த்ரா ரெண்டாரிய (35) என்பவர் தனது 9 வயது மகளுடன் போர்டு எஸ்கேப் காரில் சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் 200 அடி பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்தது.

பின்னர் அங்கிருந்து உருண்டு கீழே வந்து விழுந்தது. இதில் அடிபட்டு அலிஜேந்திரா வண்டியிலேயே இறந்துவிட்டார். ஆனால் அந்த சிறுமி மட்டும் காயங்களுடன் உயிர்பிழைத்தாள். பின்னர் நசுங்கி கிடந்த அந்த வண்டியிலிருந்து அந்த சிறுமி வெளியே தவழ்ந்து வந்தாள்.

முட்புதர்கள் நிறைந்த, கரடு முரடான பாதையின் வழியே செங்குத்தான பள்ளத்தாக்கில் ஏறி நடுஇரவில், நடுரோட்டில் உதவிக்காக நடக்க ஆரம்பித்தாள். காயங்கள் மற்றும் வீக்கத்துடன் இருந்த அந்த சிறுமி, ஒநாய்கள் நடமாட்டம் உள்ள அந்த பகுதியில் கடும் இருட்டில் தைரியமாக நடந்து வந்து வழியில் தென்பட்ட வீடுகளை தட்டி உதவி கேட்டு இருக்கிறாள்.

எந்த உதவியும் கிடைக்காத நிலையில் அருகில் இருந்த ரெயில்வே நிலையத்தை அடைந்துள்ளாள். அதிகாலை 2.30 மணியளவில் அப்போது அந்த சாலை வழியே மோட்டர் சைக்கிளில் சென்ற ஒருவரை கையை நீட்டி உதவிகேட்டிருக்கிறாள்.

பின்னர் அந்த செய்தி நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து வந்து போலீசார் அந்த சிறுமியை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்து நடந்த பகுதியில் இறந்துகிடந்த அவளின் தகப்பனாரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மது அருந்தி வாகனத்தை ஓட்டியதால் இந்த விபத்து நடந்ததா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெரும் விபத்தில் சிக்கி மனம் தளராமல், உதவி தேடி தனியாக, தைரியமாக நடுஇரவில் நடந்து வந்த அந்த 9 வயது சிறுமியின் தைரியத்தை வெகுவாக அனைவரும் பாராட்டுகின்றனர்.

 

 

1,583 total views, 20 views today

மூலக்கதை