கனடாவில் ஈழத் தமிழரின் மற்றொரு சாதனை! நடா ராஜ்குமாருக்கு கிடைத்த 102.7 FM அனுமதி

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
கனடாவில் ஈழத் தமிழரின் மற்றொரு சாதனை! நடா ராஜ்குமாருக்கு கிடைத்த 102.7 FM அனுமதி

கனடாவில் கடந்த 23 வருடங்களாக கீதவாணி என்னும் உலகத் தமிழ்வானொலி மூலம் கனடியத் தமிழர் மத்தியில் ஒரு வெற்றிகரமான ஒலிபரப்பாளராக திகழும் நடா ராஜ்குமாருக்கு, East FM 102.7 என்னும் வானொலி நிலையத்தை நடத்தும் அங்கீகாரம் நேற்று முன்தினம் 5ம் திகதி தொடக்கம் வழங்கப்பட்டுள்ளது.

கனேடிய வானொலி, தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டுத் திணைக்களத்தினால் ரொறன்ரோ பெருநகரத்தின் புதிய பண்பலை வரிசையாக 102.7 FM அலைவரிசைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தமிழ் மற்றும் பல்கலாச்சார மொழிகளில் ஒலிபரப்பாக உள்ள இந்தப் புதிய அலைவரிசைக்கு East Fm என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பலமில்லியன் முதலீட்டில் உருவாகவுள்ள புதிய ஒலிபரப்பு நிலையம் இளைய தலைமுறையினரை இலக்கு வைத்து நிகழ்சிகளை வடிவமைக்கத் திட்டமிட்டுள்ள போதும், ஒலிபரப்பாக உள்ள நிகழ்சிகள் அனைத்தும் எல்லா வயதினரையும் கவர்ந்திழுக்கும் என ஈஸ்ட் எப்.எம் அதிபர் நடா ராஜ்குமார் தெரிவித்தார்.

எனது இறை நம்பிக்கையும் சக ஊழியர்களின் அயராத முயற்சியும், எனது கடுமையான உழைப்பும் மக்களின் ஆதரவும் சேர்ந்து எனக்கு இந்த வெற்றியை தேடித்தந்துள்ளது.

இந்த நேரத்தில் மாபெரும் வெற்றிக்குத் துணை நின்ற அத்தனை உறவுகளுக்கும், சக ஊடக நண்பர்களுக்கும், பொது அமைப்புக்கள், பல் கலாச்சாரத் தலைவர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை ஈஸ்ட் எப்.எம் அதிபர் நடா ராஜ்குமார் தெரிவித்துக் கொண்டார்.

மூலக்கதை