கங்ஞம் ஸ்ரைல் ப்சி ஜஸ்ரின் பீபருடன் கூட்டு

CANADA MIRROR  CANADA MIRROR
கங்ஞம் ஸ்ரைல் ப்சி ஜஸ்ரின் பீபருடன் கூட்டு

தென் கொரியாவின் கங்ஞம் ஸ்ரைல் பாடல் நாயகன் Gangnam Style ப்சி காதலில் துவண்டு போயிருக்கும் கனடியப் பாடகர் ஜஸ்ரின் பீபருடன் கூட்டாகப் பாடல் பதிவொன்றை வெளியிடவுள்ளதாக ஹேஸ்யம் தெரிவித்துள்ளார்.

எம்.ரி.வி. தொலைக்காட்சியின் ஐரோப்பிய விருதுவிழாவில் சிறந்த வீடியோவிற்கான பரிசிலைத் தட்டிய ப்சியிடம் உங்கள் இருவருக்கும் ஒருவரே நிர்வாகக் கவணிப்பைச் செய்வதால் நீங்கள் ஜஸ்ரினுடன் இணைந்து பாடுவீர்களா எனக் கேட்ட போதே,

நான் எனது அடுத்த பாடல் இறுவட்டுப் பதிவை ஆரம்பித்து விட்டேன். அதலொரு பிரபல்யம் பாடுகிறார். இப்போதைக்கு அவர் யாரொன்று நான் கூற முடியாது. ஆனால் நான் தென்கொரிய மொழியில் பாடுவது உங்களில் பலருக்கு என்னவென்றே புரியாது எனவே எனது இறுவட்டில் ஆங்கிலப் பாடல்களும் இருக்க வேண்டும்

எனவே அவ்வாறான சாத்தியம் உண்டு என்பதைப் பூடகமாகத் தெரிவித்தார். இன்று உலகெல்லாம் கலக்கிக் கொண்டிருக்கும் இவரது தென்கொரிய மற்றும் ஆங்கில மொழிக் கலவை கொண்ட பாடல் உலகைக் கிறங்கடி வைத்துக் கொண்டிருக்கிறது.

இது எப்படிச் சாத்தியமானது என்று கேட்ட போது, நான் 12 வருடங்களாகப் பாடி வருகிறேன். இது போலப் பல வித்தியாசமான பாடல்களை கொடுத்துள்ளேன். தென்கொரியர்களிற்காக நான் பாடிய இந்தப் பாடல் உலகைக் கவர்ந்துள்ளது. இது பெரிய வெற்றி, நான் எதிர்பார்க்காதது என்று கூறினார்.

2,810 total views, 18 views today

மூலக்கதை