இந்தியாவுடன் தோற்ற சோகம் மறைவதற்குள், வங்கதேச கேப்டனை சஸ்பெண்ட் செய்த ஐசிசி!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவுடன் தோற்ற சோகம் மறைவதற்குள், வங்கதேச கேப்டனை சஸ்பெண்ட் செய்த ஐசிசி!

மெல்போர்ன்: காலிறுதியில் இந்தியாவுடன் தோற்ற சோகத்தோடு, மேலும் ஒரு சோகமும் வங்கதேச கேப்டன் மஸ்ரப் மோர்டசாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆம்.. ஒரு போட்டியில் ஆட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், போட்டி ஊதியத்திலும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தின்போது, பந்து வீசி முடிக்க குறிப்பிட்ட நேரத்தைவிட அதிகம் எடுத்துக் கொண்டதாக வங்கதேச கேப்டன் மஸ்ரப் மோர்டசா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், காலிறுதியில் இந்தியாவுக்கு எதிராகவும், அதேபோல அதிக நேரத்தை செலவிட்டதால், மோர்டசாவுக்கு, ஒரு போட்டியில் விளையாட தடை விதித்துள்ளார் போட்டி ரெஃப்ரி ரோசன் மஹனமா. அதுமட்டுமின்றி, நேற்றையை போட்டிக் கட்டணததில் 40 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது.

குறிப்பிட்ட நேரத்தில், 2 ஓவர்கள் குறைவாக வீசப்பட்டிருந்ததால் இந்த தண்டனை கிடைத்துள்ளது. அதேபோல, வங்கதேச வீரர்களுக்கும் போட்டி சம்பளத்தில் 20 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. மோட்சரா, சக வீரர்களிடம் கத்தியபடியும், கோபப்பட்டுக் கொண்டும் இருந்ததை ரசிகர்கள் டிவிகள் வாயிலாக, பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். இதிலேயே அவருக்கு நேரம் விரையமாகிவிட்டதாக ரசிகர்கள் கிண்டல் செய்கின்றனர்.

மூலக்கதை