அடடே, இது ரொம்பப் பிரமாதமா இருக்கே...!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடடே, இது ரொம்பப் பிரமாதமா இருக்கே...!

7 போட்டிகள் பாக்கெட்டில்

இந்தியா நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வென்றுள்ளது. இது ஒரு மிகப் பெரிய சாதனையாகும். இதுவரை உலகக் கோப்பை வரலாற்றில் எந்த அணியும் இப்படி தொடர்ந்து வென்றதில்லை.

காலிறுதியில் களேபர வெற்றி

மெல்போர்ன் மைதானத்தில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை 109 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வென்றது இந்தியா.

காரணம்... பேட்டிங் பவர் பிளே!

இந்தியா தனது பேட்டிங் பலர் பிளேயை மிகச் சரியாக பயன்படுத்தி ரன் குவித்து வருவதே இந்தத் தொடர் வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாகும்.

7 போட்டிகளில் நோ விக்கெட்!

இந்த 7 போட்டிகளிலும் பேட்டிங் பவர் பிளேயின்போது இந்தியா ஒருமுறை கூட ஒரு விக்கெட்டைக் கூட இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஆச்சரியகரமான, அற்புதமான விஷயமாகும்.

பிச்சுப்புடுவோம் பிச்சு

நேற்றைய ஆட்டத்திலும் கூட பேட்டிங் பவர் பிளேயின்போது 5 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் குவித்திருந்தது.

அதெல்லாம் அப்ப பாஸ்

இதுகுறித்து கேப்டன் டோணியிடமே நேற்று செய்தியாளர்கள் கேட்டபோது, கடந்த காலங்களில் சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் பேட்டிங் பவர் பிளேயை இப்போது நாங்கள் மிகச் சரியாக பயன்படுத்துகிறோம். அதை சிறப்பாக கையாளுவதாகவே கருதுகிறேன் என்றார்.

போனஸ்தான்

மேலும் அவர் கூறுகையில், அதற்காக இதை லாட்டரி என்று கூறி விட முடியாது. கூடுதலாக 50 ரன்கள் வரை எடுக்க இது பயன்படும். அவ்வளவுதான். மற்ற ஓவர்களில் நீங்கள் எடுக்கும் ரன்களும் மிக மிக அவசியம் என்றார் டோணி.

பாகிஸ்தனுக்கா எதிராக 25

பாகிஸ்தானுக்கு எதிராக் நடந்த முதல் போட்டியில் இந்தியா தனது பேட்டிங் பவர் பிளேயின்போது 5 ஓவர்களில் (36-40) 25 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது 44 ரன்களைக் குவித்திருந்தது.

எமிரேட்ஸுக்கு எதிராக 16

எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது 17 -18.5 ஓவர்களில் இந்தியா 16 ரன்களை எடுத்திருந்தது. மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியின்போது 21 ரன்களைச் சேர்த்திருந்தது.

அயர்லாந்துக்கு எதிராக 32

அயர்லாந்துக்கு எதிரான போட்டியின்போது (34 - 36.5) ஓவர்களில் 32 ரன்களைச் சேர்த்திருந்தது. ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியின்போது 39 ரன்களைக் குவித்திருந்தது.

வங்கதேசத்துக்குத்தான் செம ஆப்பு

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில்தான் அதிக அளவில் ரன் குவித்தது இந்தியா. 36 முதல் 40 ஓவர்கள் வரையிலான சமயத்தில் அது 50 ரன்களைக் குவித்தது.

மூலக்கதை