உலகக் கோப்பை: இந்தியா-ஆஸ்திரேலியா ஆட்டம், யாருக்கு வெற்றி?

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
உலகக் கோப்பை: இந்தியாஆஸ்திரேலியா ஆட்டம், யாருக்கு வெற்றி?

இந்தியக் கிரிக்கெட் அணி மும்பை திரும்புமா அல்லது மெல்பர்ண் செல்லுமா என்பது வியாழக்கிழமை முடிவாகிறது.

நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்தியா சிட்னி நகரில் விளையாடுகிறது.

உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடப்புச் சாம்பியன் இந்தியா இந்த ஆட்டத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு செல்லுமா அல்லது முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா இழந்த பெருமையை மீட்குமா என்பதே இப்போது ரசிகர்கள் மத்தியிலுள்ள கேள்வி.

மெல்பர்ண் நகரில் எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கு நியூசிலாந்து ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் யாரை எதிர்த்து ஆடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இதுவரை விளையாடியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது அவர்களுக்கு சாதகமான ஒரு அம்சம்.

ஆனால் இப்போட்டிக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் விளையாடிய முத்தரப்பு போட்டியில் இந்தியா தோவியடைந்திருந்தது என்பதும், மெல்பர்ண் நகரில் உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆஸ்திரேலிய அணிக்கான ஆதரவு என்பதும் ஆஸி அணிக்கு பலம் சேர்க்கும் ஒரு விஷயம்.

அதேவேளை ஆஸ்திரேலிய அணி காலிறுதிக்கு முன்பாக ஆடிய ஆறு ஆட்டங்களில் ஒன்றில் தோல்வியடைந்தள்ளனர், ஒரு ஆட்டம் மழையின் காரணமாக வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

எனினும் ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதலான, நம்பிக்கையூட்டும் ஒரு அம்சம் உள்ளது. நிகர ஓட்டவீதம் என்று பார்க்கும்போது இந்தியாவைவிட ஆஸ்திரேலியாவின் கை மேலோங்கியுள்ளது.

காலநிலை, யார் முதலில் ஆடுவார்கள் ஆகியவையும் வெற்றியை தீர்மானிக்ககூடிய காரணிகளாக அமையக்கூடும் என்று கிரிக்கெட் திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மூலக்கதை