6 அரையிறுதி தோல்விகளுக்குபின் முதல் முறையாக... உலக கோப்பை பைனலில் நியூசிலாந்து!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
6 அரையிறுதி தோல்விகளுக்குபின் முதல் முறையாக... உலக கோப்பை பைனலில் நியூசிலாந்து!

ஆக்லாந்து[1]: 6 முறை உலக கோப்பை அரையிறுதிவரை வந்து வீடு திரும்பிய நியூசிலாந்து, முதல் முறையாக, இறுதி போட்டிக்குள் தற்போதுதான் அடியெடுத்து வைக்கிறது.

1975ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடர் தொடங்கியதில் இருந்து சர்வதேச அணியாக விளங்கிவருவது நியூசிலாந்து. ஆனால் அதன் உலக கோப்பை பயணம், தென் ஆப்பிரிக்காவை போன்றே, சோகங்கள் நிறைந்ததுதான். குறிப்பாக, 6 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அந்த அணியால் ஒருமுறை கூட பைனலுக்குள் பிரவேசிக்க முடியாமல் இருந்தது.

இதோ நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்புகள் கலைந்த கதை:

*1975ம் ஆண்டு முதல் உலக கோப்பையிலேயே வெஸ்ட் இண்டீசிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது.

*1979ம் ஆண்டு உலக கோப்பையின்போது 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது.

*1992ல், பாகிஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த போட்டி நடந்த அதே ஆக்லாந்தில்தான், நடப்பு உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது நியூசிலாந்து.

*1999 உலக கோப்பையில், பாகிஸ்தானிடம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது நியூசிலாந்து.

*2007 உலக கோப்பையில், இலங்கையிடம் 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

*2011 உலக கோப்பையிலும், இலங்கையிடம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்றது நியூசிலாந்து.

7வது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து, முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதற்கு நியூசிலாந்துக்கு 39 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது.

இதன் மூலம், உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாடும் 7வது அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 6 நாடுகள் மட்டுமே உலக கோப்பை இறுதி போட்டிகளில் ஆடியுள்ளன.

References^ Topic: ஆக்லாந்து (tamil.oneindia.com)

மூலக்கதை