தென் ஆப்பிரிக்காவின் உலக கோப்பை கனவை மீண்டும் ஒருமுறை கலைத்து போட்ட மழை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தென் ஆப்பிரிக்காவின் உலக கோப்பை கனவை மீண்டும் ஒருமுறை கலைத்து போட்ட மழை!

தென் ஆப்பிரிக்கா

அதன்பிறகு மாற்றியமைக்கப்பட்ட விதிமுறைப்படி, தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எப்படி தெரியுமா? 1 பந்தில், 22 ரன்களை எடுக்க வேண்டும் என்று. வண்டு முருகன் பாணியில் சொல்ல வேண்டுமானால், "உலகத்திலேயே இப்படி ஒரு கண்ட்றாவியான ரூல்ஸ்சை எங்காவது பார்த்திருக்கிறீர்களா யுவர் ஆனர்" என்றுதான் கேட்க வேண்டும். ஆனால், என்ன பண்ண, ஹெல்மெட்டையும், பேடையும் போட்டுக் கொண்டு பேட்டிங் செய்ய அப்பாவிகளாய் வந்தனர் தென் ஆப்பிரிக்கர்கள். விதியை நொந்தபடி வீட்டுக்கு நடந்தனர்.

டை போட்டியிலும் அக்கப்போர்

இதன்பிறகு 1999 உலக கோப்பையில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் போட்டி டை ஆனது. லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருந்ததாம். அதனால், ஆஸ்திரேலியாதான் இறுதி போட்டிக்கு போவார்கள் என்றும் அறிவித்துவிட்டார்கள்.

 

 

மீண்டும் மழை

2003ல் சொந்த நாட்டில் நடந்த போட்டியிலும் லீக் ஆட்டத்தில் மழையால் டக்வொர்த் லீவிஸ் அமலுக்கு வந்தது. ஆனால், விதியை சரியாக கணிக்காமலும், புரிந்துகொள்ளாமலும் ஆடி கோட்டை விட்டது தென் ஆப்பிரிக்கா.

பரம்பரை வில்லன்

இதோ இன்று, முதலில் தடுமாறிய தென் ஆப்பிரிக்க பேட்டிங்கை, டுப்ளசிஸ் மற்றும் ருஸ்சோவ் அழகாக மீட்டெடுத்து வந்தனர். தென் ஆப்பிரிக்கா 38 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா மிகவும் வலுவாக இருந்தது. ஆனால், அப்போதுதான், தென் ஆப்பிரிக்காவின் பரம்பரை வில்லன் மழை குறுக்கிட்டது.

என்ன கொடுமை சார் இதெல்லாம்..

மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது 43 ஓவர்கள்தான் உங்களுக்கு.. அதற்குள் எவ்வளவு முடியுமோ அடித்துக் கொள்ளுங்கள் என்று தென் ஆப்பிரிக்க தலைமீது பாரத்தை கட்டினர் விதிமுறை வகுப்பாளர்கள். இது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது தென் ஆப்பிரிக்காவுக்கு. ஏனெனில், தென் ஆப்பிரிக்கா கடைசி பத்து ஓவர்களில் விளாசலாம் என்ற முனைப்பில் இருந்தபோது, ஓவர்கள் குறைக்கப்பட்டது. அல்லது கண்டிப்பாக 350 ரன்களை கடப்பதற்கான சூழ்நிலை தென் ஆப்பிரிக்காவுக்கு இருந்தது.

நியூசிலாந்துக்கு சாதகம்

5 ஓவர்களில் கண்ணாபின்னாவென அடித்து 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்களை குவித்தது. எனவே, டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, நியூசிலாந்து வெற்றிக்கு, 298 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்தை பொறுத்தளவில் சாதகமான அம்சம் என்னவென்றால், முதல் பந்தில் இருந்தே, தனது டார்கெட் என்ன என்பது நன்கு தெரிந்துவிட்டதுதான். ஆனால் தென் ஆப்பிரிக்காவிடம் அடிக்க வேண்டிய நேரத்தில் பேட் பிடுங்கப்பட்டுவிட்டது.

பரிகாரம் பண்ணுங்கப்பா..

இவ்வாறு, வழக்கம்போல, தென் ஆப்பிரிக்காவின் உலக கோப்பை கனவும் கலைந்து போனது. பேசாம, வருண பகவானுக்கு ஒரு யாகம் பண்ணிருங்களேன், உங்கள பிடிச்ச தண்ணி கண்டம் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்மூர் ஜோதிடர்கள் யாராவது டி வில்லியர்ஸ் டிவிட்டர் அக்கவுண்ட்டை கான்டாக்ட் செய்து சொன்னால் தேவலை என்ற நிலைதான், தென் ஆப்பிரிக்காவுக்கு..

மூலக்கதை