பங்காளி, அவன் வெயிட்டானவன்தான்... ஆனா நம்ம கிட்ட இந்த 5 மேட்டர் இருக்கே.. அதுக்கென்ன சொல்ற?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பங்காளி, அவன் வெயிட்டானவன்தான்... ஆனா நம்ம கிட்ட இந்த 5 மேட்டர் இருக்கே.. அதுக்கென்ன சொல்ற?

அட்டகாசமான கேப்டன்

டோணி இந்தியா கண்ட மிகச் சிறந்த கேப்டன்களில் முக்கியமான இடத்தில் இருக்கிறார். நடப்புத் தொடரில் மட்டுமல்லாமல் பல தொடர்களில் அவர் இந்தியாவை மிகச் சிறந்த முறையில் வழி நடத்தியவர். உத்திகள் வகுப்பதிலும், அதிரடியாக ஆடுவதிலும், சிறந்த முறையில் போட்டியை முடிப்பதிலும், டென்ஷனே இல்லாமல் டெர்ரர் காட்டுபவர்.

மாற்றி யோசிப்பவர்

வழக்கமான யோசனைகளை அவரிடம் காண முடியாது. முற்றிலும் மாற்றி யோசிப்பவர். இப்படிப்பட்ட மாறுபட்ட சிந்தனை எப்போதுமே அதிரிபுதிரியான முடிவுகளையே தரும் என்பதால் டோணியை விட வேறு ஒரு பலம் இந்திய அணிக்குத் தேவையா என்கிறார்கள்.

ஸ்பின்னர்கள்

இந்தியாவின் 2வது பலம் சுழற்பந்து வீச்சாளர்கள். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் இணைந்து கலக்கினால் அவர்களைச் சமாளிக்க நிச்சயம் ஆஸ்திரேலிய வீரர்களால் முடியாது என்பது இன்னொரு வாதம். அதேபோல சுரேஷ் ரெய்னாவும் சிறந்த சுழற்பந்து வீச்சைக் கொடுக்கக் கூடியவர். அஸ்வின் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

அபாரமான அஸ்வின்

அஸ்வின் இதுவரை 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஜடேஜா 9 பேரை காலி செய்துள்ளார். மறுபக்கம் ஆஸ்திரேலியா அதிகம் நம்பியுள்ள சுழற்பந்து வீச்சாளரான மேக்ஸ்வெல் இதுவரை வெறும் 5 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவர் பார்ட் டைம் பவுலர் மட்டுமே. ஆஸ்திரேலியாவிடம் முழுமையான ஸ்பின்னர் இல்லை என்பது முக்கியமானது.

சிட்னியில் சட்னிதான்!

சிட்னி ஸ்பின்னுக்கு ஏற்ற மைதானம். எனவே ஆஸ்திரேலியா நிச்சயம் தடுமாறும். அந்தத் தடுமாற்றத்தை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொண்டாலே போதும் என்கிறார்கள்.

3வது காரணம் வலுவான பேட்டிங்

3வது காரணம், இந்தியாவின் வலுவான பேட்டிங் வரிசை. தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ரோஹித் சர்மா மட்டுமல்ல.. அடுத்து விராத் கோஹ்லியும் மிக வலுவான ஒரு வீரராக உள்ளார். இவர்களை உடைப்பது என்பது இதுவரை எளிதாக நடக்கவில்லை. இது முக்கியமானது.

 

 

3 பேரும் சேர்ந்தால்

இந்த 3 பேரும் சேர்ந்து கடந்த 7 போட்டிகளிலும் 967 ரன்களைக் குவித்துள்ளனர். இதில் 103 பவுண்டரிகள், 16 சிக்ஸர்கள் அடக்கம்.

அவங்க சைட் வீக்தான்

மறுபக்கம் ஆஸ்திரேலியாவின் முதல் 3 வீரர்களான பின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இணைந்து 728 ரன்களை மட்டுமே குவித்துள்ளனர்.

இந்திய ரசிகர்கள்

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய ரசிகர்கள்தான் மிகப் பெரிய பலமாக இந்திய அணிக்கு அமைந்துள்ளனர். ஆம், போட்டி நடைபெறும் மைதானங்களில் இந்தியர்கள் பெருமளவில் குவிந்து அணிக்கு பெரும் பூஸ்ட்டாக அமைந்து வருகின்றனர். இந்தியாவில் போட்டி நடைபெறுவது போலவே உள்ளது. இது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும். குறிப்பாக சிட்னியில் பெருமளவில் இந்தியர்கள் உள்ளனர். அத்தனை பேரும் வந்தால் ஆஸ்திரேலியர்களுக்கு உட்கார இடம் கிடைக்காது என்கிறார்கள்.

 

 

எல்லாத்தையும் விடுங்க.. இவங்களைப் பாருங்க

சரிப்பா, ஸ்பின் இருக்கு, கூட்டம் இருக்கு, டோணி கூட இருக்காரு.. வேற என்ன இருக்கு உங்க கிட்ட என்று கேட்போருக்கு சரியான பதிலடியாக இந்தியாவின் அதிரடியான வேகப் பந்து வீச்சாளர்களும் சிறப்பான பார்மில் உள்ளனர். இது மிகப் பெரிய விஷயமாகும். முகம்மது ஷமி, உமேஷ் யாதவ், மொஹித் சர்மா ஆகிய 3 பேருமே அசத்தி வருகின்றனர்.

 

 

வஹாப்பை விட வேகமாக

எப்படி பாகிஸ்தானின் வஹாப் ஆஸ்திரேலியாவை மிரட்டினாரோ அதேபோல செய்ய நம்மிடம் ஷமி உள்ளார். நடப்புத் தொடரில் ஷமி 17 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். சிறந்த பந்து வீச்சை அவர் கொடுத்து வருகிறார். அதேபோல உமேஷ் யாதவ், மொஹித் சர்மாவும் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். இதுவும் இந்தியாவுக்கு மிகப் பெரிய பலமாகும்.

இப்படி இந்தியாவிடம் ஐந்து விதமான முக்கியமான பலங்கள் இருப்பதால், நிச்சயம் இந்தியாவால் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியும் என்பது இந்தியா வெல்லும் என்று கூறுவோர் முன்வைக்கும் வாதமாகும்.

 

 

மூலக்கதை