முதல் முறையாக உலக கோப்பை பைனலுக்குள் நுழைய தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து பலப் பரீட்சை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதல் முறையாக உலக கோப்பை பைனலுக்குள் நுழைய தென் ஆப்பிரிக்காநியூசிலாந்து பலப் பரீட்சை!

அனைத்து துறையிலும் பலம்

பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் நியூசிலாந்து அணி சிறப்பாக இருக்கிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கால் இறுதியில் அந்த அணியின் தொடக்க வீரர் குப்தில் 237 ரன் குவித்து உலக கோப்பையில் சாதனை படைத்தார். இந்த தொடரில் 498 ரன் குவித்துள்ளார். கேப்டன் மேக்கல்லம், வில்லியம்சன், டெய்லர், ஆண்டர்சன், எல்லியாட் போன்ற சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்களும் நியூசிலாந்து அணியில் உள்ளார்.

டிரென்ட் பவுல்ட் டாப்

பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் முதுகெலும்பாக உள்ளார். அவர் 19 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு இவர் கடும் சவாலாக இருப்பார். இது தவிர சவுத்தி, வெட்டோரி, போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா நிலை

எதிரணியான தென் ஆப்பிரிக்கா, இதுவரை 2 முறை அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தபோதிலும், ஒருமுறை கூட இறுதி போட்டிக்கு சென்றதில்லை. 1992ல் மழை விதியால் இங்கிலாந்திடம் தோற்றது. 1999ல் ஆஸ்திரேலியாவுடன் மோதிய பரபரப்பான ஆட்டம் ‘டை'யில் முடிந்தது. சூப்பர் சிக்கில் அந்த அணியிடம் தோற்று இருந்ததால் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது.

 

 

டி வில்லியர்ஸ் இருக்க பயமேன்..

நடப்பு உலக கோப்பையில், முற்றிலும் மாறுபட்ட அணியாக உள்ளது தென் ஆப்பிரிக்கா. சாதனைகளை அடுக்கும் பேட்ஸ்மேன்கள், சர்வதேச தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் என வலுவாக காட்சியளிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு தூணாகவும், துருப்புச்சீட்டாகவும் இருக்கிறார் கேப்டன் டி வில்லியர்ஸ். ஒருநாள் போட்டிகளில் குறைவான பந்துகளில் 150 ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில், இந்த உலகக்கோப்பையின் மூலம் முதலிடத்தை பிடித்தார் டி வில்லியர்ஸ். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 64 பந்துகளில் இந்த சாதனையை நிகழ்த்தினார் அவர்.

ஆரம்பத்தில் ஆம்லா

உலகக் கோப்பையில் ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்கள் பட்டியலிலும் தமது பெயரை டிவில்லியர்ஸ் இணைத்துக் கொண்டார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்தச்சாதனையை நிகழ்த்தினார். நடப்புத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ், 1 சதம், 2 அரைசதம் உட்பட 417 ரன்கள் குவித்துள்ளார். ஹஷிம் ஆம்லா தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க பலமாக இருக்கிறார். 7 போட்டிகளில் 1 சதம், ஒரு அரைசதம் உட்பட 323 ரன்களை எடுத்துள்ளார் அவர்.

நடுவரிசை அருமை

பாப் டுப்ளசிஸ், டுமினி, டேவிட் மில்லர், ரச்சவ் ஆகியோர் தென்னாப்பிரிக்க அணியின் மத்திய வரிசையில் பலமாக உள்ளனர். டுப்ளஸ்சி 6 போட்டிகளில் ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 298 ரன்களை குவித்துள்ளார்.

 

 

பந்து வீச்சு எப்படி?

ஸ்டெய்ன், மோர்க்கல், பிலாண்டர், அப்பாட், இம்ரான் தாகீர் ஆகிய சிறந்த பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் உள்ளனர். இம்ரான் தாகீரின் சுழற்பந்து வீச்சு அந்த அணிக்கு பக்கபலமாகவே உள்ளது. 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். 45 ரன்களை விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதே அவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது.

வேக இரட்டையர்கள்

தென்னாப்ரிக்காவின் அனுபவ வேகபந்து வீச்சாளர் மோர்க்கல் 7 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 34 ரன்களை விட்டுகொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சாக உள்ளது. மற்றொரு அனுபவ நாயகன் ஸ்டெயின் 7 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 30 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.

மூலக்கதை