கப்தில் போட்ட டபுள் சதத்தை கட்டிய மனைவி கூட கொண்டாடவில்லை... தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கப்தில் போட்ட டபுள் சதத்தை கட்டிய மனைவி கூட கொண்டாடவில்லை... தெரியுமா?

மனைவி நேரில் பார்த்தார்

கப்திலின் இந்த ஆட்டத்தை அவரது காதல் மனைவி லாரா மெக்கோல்ட்ரிக், மைதானத்தில், நேரில் கண்டுகளித்து உற்சாகப்படுத்தினார். கணவரின் அதிரடி ஆட்டம் குறித்து அவர் கூறியதாவது: எனது பெற்றோருடன் அமர்ந்து கப்திலின் ஆட்டத்தை கண்டு ரசித்தேன். இது எங்கள் எல்லோருக்கும் மறக்க முடியாத ஒரு தருணம்.

கொண்டாட்டம் இல்லை

ஆனால் இந்த சாதனையை நாங்கள் பெரிய அளவில் கொண்டாடப்போவதில்லை. இது மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனாலும் உலக கோப்பையை வென்ற பிறகு கொண்டாட்டத்தை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம், என்று கூறியுள்ளார்.

பலே மனைவி

கர்ச்சிப் வாங்கினாலே பார்ட்டி வைக்கும் இந்த காலத்தில், இரட்டை சதம் அடித்தபோதும், அமைதியாக இருக்கும் கப்தில் மனைவி வித்தியாசமானவர்தான்.

ரேடியோ ஜாக்கி

லாரா மெக்கோல்ட்ரிக், தொலைக்காட்சி பிரபலம் மற்றும் ரேடியோ ஜாக்கியும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை விரல்

13 வயதில் ஏற்பட்ட விபத்தால், கப்தில் இடது காலில் 3 விரல்கள் இல்லை. அவர் இரட்டை விரல் கப்தில் என்றுதான் சக வீரர்களால் அழைக்கப்படுகிறார் என்பது நினைவு கூறத்தக்கது.

மூலக்கதை