மொன்றியலில் மே தின ஊர்வலத்தின்போது பொலிசாரால் பொதுமக்கள் கைது

CANADA MIRROR  CANADA MIRROR
மொன்றியலில் மே தின ஊர்வலத்தின்போது  பொலிசாரால் பொதுமக்கள் கைது

ஒரு பொலிஸ் அதிகாரி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரிடமிருந்த கொடியைப் பறித்து எடுக்க முயல்கின்றார் எனத் தெரிகிறது. புதன்கிழமை நடைபெற்ற இந்த ஊர்வலமானது முதலாளித்துவத்தை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் எனவும் தெரியவருகிறது.

பல நூற்றுக்கணக்கான முதலாளித்துவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கியூபெக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கியமான உட்பொருள் ஊழல் என்பதை வெளிக்காட்டுவதே எனவும் கூறப்படுகின்றது.

புதன்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் யாவரும் தனிப்பட்ட நபரின் கிளப்பிற்கு வெளியில் ஒன்று சேர்வது எனத் தீர்மானித்திருந்ததாகவும், இதுபற்றிய விபரம் அரசியல்வாதிகள், பிரமுகர்கள் யாவரும் அறிந்த விடையம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்த தனிப்பட்ட கிளப்பில்தான் அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தமான பல மக்களுக்கு எதிரான சதிகள் தீட்டப்படுகின்றன என்பதையும், அதுபற்றிய தமது வெறுப்புத்தன்மை, ஆத்திரம் என்பவற்றை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள விளைகின்றோம் என ஒரு அறிக்கை சுட்டிக்காட்டுவதாக ஆதாரமற்ற தகவல் தெரிவிக்கின்றது.

இந்த அறிக்கையை முதலாளித்துவ எதர்ப்பியக்கத்தின் ஒருங்கமைப்பாளர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள் எனக் கருதப்படுகின்றது.   எனவே அந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கையைகத் தடுக்கும் முகமாவே கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

2,879 total views, 18 views today

மூலக்கதை