ஒழுங்கா விளையாடாட்டி இதெல்லாம் பொய்யாப் போய்ருமே தம்பி....!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒழுங்கா விளையாடாட்டி இதெல்லாம் பொய்யாப் போய்ருமே தம்பி....!

சென்னை: வங்கதேசத்தை "வாழ்த்தியும், உயர்த்தியும்" பேஸ்புக்கிலும், வாட்ஸ் ஆப்பிலும் ஏகப்பட்ட ட்ரோல்கள்.. ஆனால் தற்போது வங்கதேச பவுலர்களிடம் இந்தியா திணறி வருவதைப் பார்க்கும்போது இந்த உழைப்பெல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சம் வரத்தான் செய்கிறது.

பச்சை சட்டை போட்டா அடிப்போம் என்று ரசிகர்கள் வீராவேசம் பேசி வருகிறார்கள். பேஸ்புக்கிலும், வாட்ஸ் ஆப்பிலும் பச்சை சட்டை அணிகளை சீண்டி வருகிறார்கள், இந்தியாவை உயர்த்தி வாழ்த்தி வருகிறார்கள்.

அந்த வகையில் வங்கதேசத்தையும் கடந்த சில நாட்களாக வறுத்தெடுத்துக் கொண்டுள்ளனர். இதெல்லாம் வங்கதேச ரசிகர்களுக்குத் தெரியுமா என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது. ஆனாலும் நம்மவர்கள் விடுவதாக இல்லை. யோசித்து யோசித்து அசத்திக் கொண்டுள்ளனர்.

ஆனால் இன்று வங்கதேசத்திடம் இந்தியா தடுமாறுவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 35 ஓவர்களைத் தண்டி விட்டது இந்தியா. இன்னும் 200 ரன் கூட வரவில்லை. முக்கியமான 3 விக்கெட்கள் விழுந்து விட்டன.

இதே ரேஞ்சில் போனால் இந்தியாவால் 300 ரன்களைத் தொட முடியுமா என்ற கேள்வியும் உள்ளது. அதேசமயம் இன்னும் டோணி இருக்கிறார். களத்தில் ரெய்னாவும், ரோஹித்தும் போராடி வருகிறார்கள். கடைசி நேரத்தில் அதிரடி காட்டி அஸ்வினும், ஜடேஜாவும் அசத்தினால் இந்தியா பெரிய ஸ்கோரை எட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

இருந்தாலும் சுதாரிப்பு இன்னும் மிக மிக முக்கியமாகும். அசந்தால் வங்கதேசத்தினர் நம் பக்கமே நமது கிண்டல்களைத் திருப்பி விட்டு விடுவார்கள். என்னவோ, போட்டி முடியும் வரை வங்கதேசம் குறித்த கிண்டல் படங்களைப் பார்த்து ரசிப்போம்.. !

மூலக்கதை