தேவையில்லாத நேரத்தில் பார்க்கக் கூடாததைப் பார்த்து "பப்பரப்பா" என வீழ்ந்த கோஹ்லி... !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தேவையில்லாத நேரத்தில் பார்க்கக் கூடாததைப் பார்த்து பப்பரப்பா என வீழ்ந்த கோஹ்லி... !

சூப்பரப்பு..

ஆனால், இப்போது என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அனுஷ்கா நடித்து வெளியான என்.எச்.10 திரைப்படத்தை பார்த்துவிட்டு, என் லவ் அனுஷ்கா சூப்பரா நடித்துள்ளார் என்று டிவிட்டரில் கமெண்ட் போட்டார்.

இரவு பார்த்துள்ளார்

இவர் படம் பார்த்தது நேற்று முன்தினம் இரவு. உடனடியாக டிவிட்டரில் கமெண்ட் போட்டதுடன், இன்ஸ்டாகிராமில் போட்டோவையும் ஏற்றிவிட்டுள்ளார்.

பப்பரப்ப அவுட்

இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய போட்டியில், ஆப் ஸ்டம்புக்கு வெளியே, கிட்டத்தட்ட வைடு போல சென்ற பந்தை அடிக்க போய், பரிதாபமாக விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து மூன்றே ரன்களில் கோஹ்லி பெவிலியன் திரும்பினார். அதுபோன்ற ஷாட்டை வழக்கமாக கோஹ்லி அடிப்பது கிடையாது என்பது இதில் சுவாரசியம்.

பயிற்சியைவிட்டுவிட்டு படமா

அவ்வளவுதான், ரசிக சிகாமணிகள், விராட் கோஹ்லியை பிடித்துக் கொண்டனர். பந்தையத்துக்கு பயிற்சி எடுக்காமல் படம் பார்த்தால் இப்படித்தான் நடக்கும் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

விட்றா..விட்றா..

'கடைக்கண்ணை காதலியர் காட்டிவிட்டால், மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்' என்பர். ஆனால், இங்கோ உல்டாவாகிவிட்டது. அரையிறுதியில் பார்த்துக்கொள்ளலாம் கோஹ்லி.. சியர்ஸ்.

மூலக்கதை