7 வருட பகை வெடித்தது மைதானத்தில்.. கோஹ்லியை திட்டியபடி சீறி பாய்ந்த வங்கதேச பவுலர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
7 வருட பகை வெடித்தது மைதானத்தில்.. கோஹ்லியை திட்டியபடி சீறி பாய்ந்த வங்கதேச பவுலர்!

கோஹ்லி அவுட்

ஆனால், 5 நிமிடங்களில் ரசிகர்களே அதிர்ச்சியடையும் ஒரு சம்பவம் மைதானத்தில் அரங்கேறியது. ஆம்.. ருபேல் பந்து வீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து விராட் கோஹ்லி 3 ரன்களிலேயே அவுட் ஆனார்.

சீறிய ருபேல்

கோஹ்லி அவுட் ஆனதும், ருபேல் அவரை நோக்கி ஆக்ரோஷமாக எதையோ சொல்லியபடி கத்தினார். நெஞ்சை நிமிர்த்தி திமிறியபடி நின்ற அவரை சக வீரர்கள் சேர்ந்து பிடித்து வைத்தனர். விட்டால், கோஹ்லியை அடிக்க பாய்ந்துவிடுவாரோ என்று நினைக்கும் அளவுக்கு அவரது நடவடிக்கைகள் இருந்தன. ஆனால், கோஹ்லி பின்னால் திரும்பி பார்க்காமல் பெவிலியனை நோக்கி நடந்து சென்றார்.

பல ஆண்டு பகை

விராட் கோஹ்லி மீது அப்படியென்ன கோபம் ருபேலுக்கு என்று விசாரித்தால், அப்போதுதான் தெரிகிறது, இது இன்று, நேற்று வந்த பிரச்சினை இல்லை, பல ஆண்டுகால பிரச்சினை என்பது.

அப்பவே, அப்படி..

2008ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலக கோப்பையை இந்திய அணி வென்றது. அப்போது விராட் கோஹ்லிதான் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார். அந்த தொடரில், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது, ருபேல் மற்றும் விராட் கோஹ்லி இருவருக்கும் நடுவே சொற்போர் வெடித்துள்ளது. சக வீரர்கள் தலையிட்டு சண்டையை விலக்கிவிடும் நிலைக்கு போயுள்ளது.

கடந்த உலக கோப்பை

இந்த தகராறு காலம் காலமாக ஓயாமல் தொடர்ந்து வருகிறது. 2011 உலக கோப்பையின்போது, விராட் கோஹ்லி, வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்து பதிலடி கொடுத்தார். ஆனால், ருபேல் பந்து வீச்சில்தான் அப்போதும் அவுட் ஆனார். இந்நிலையில்தான், இன்றும், களத்திற்கு வந்த விராட்டை சீண்டி பார்த்துள்ளார் ருபேல். கோஹ்லியும், கொஞ்ச ரன்களில் அவுட் ஆகவே, ருபேலுக்கு ஆக்ரோஷம் தலைக்கு ஏறிவிட்டது.

பொறுத்தது போதும் கோஹ்லி..

நடிகை கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கில் ஜாமீன் பெற்று விளையாட வந்துள்ள ருபேல், இன்னும் பெரிய அளவில் சர்வதேச வீரராக மிளிராதவர். ஆனால் கோஹ்லி, சர்வதேச அளவில் முன்னணி பேட்ஸ்மேனாக தன்னை வார்த்தெடுத்துள்ளார். எனவே அடுத்த இந்தியா-வங்கதேச மோதலின்போது கோஹ்லி விஸ்வரூபம் எடுத்து ருபேலுக்கு தனது பேட்டால் பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் இந்திய ரசிகர்கள்.

மூலக்கதை