ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றது சாதனை ஜோடி, சங்ககாரா-ஜெயவர்த்தனே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றது சாதனை ஜோடி, சங்ககாராஜெயவர்த்தனே!

டெஸ்ட் போட்டிகளில் சங்ககாரா

சங்ககாரா 130 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 12 ஆயிரத்து 203 ரன்களை குவித்துள்ளார். 58.66 இவரது பேட்டிங் சராசரியாகும். கிட்டத்தட்ட ஒரு போட்டிக்கு சராசரியாக 60 ரன்களை குவித்து வந்துள்ளார் சங்ககாரா. இதில் 38 சதங்கள், 51 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 319 ரன்கள் விளாசியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இப்படி..

403 ஒருநாள் போட்டிகளில் ஆடி, 14 ஆயிரத்து 189 ரன்கள் குவித்த சங்ககாராவின் பேட்டிங் சராசரி 41.97 ஆகும். இதில் 25 சதங்களும், 93 அரை சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 169 ரன்கள் குவித்துள்ளார்.

ஜெயவர்த்தனே டெஸ்ட் திறமை

ஜெயவர்த்தனே 149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11814 ரன்களை குவித்து 49.84 என்ற சராசரியை வைத்துள்ளார். 34 சதங்கள், 50 அரை சதங்கள் விளாசிய ஜெயவர்த்தனே, ஒரு போட்டியில் 374 ரன்கள் குவித்தார்.

ஒருநாள் போட்டிகளில்..

447 ஒருநாள் போட்டிகளில் ஆடிய ஜெயவர்த்தனே, 12646 ரன்களை குவித்து 33.45 என்ற சராசரி வைத்திருந்தார். இதில் சதங்கள் 19 மற்றும் அரை சதங்கள் 77 அடங்கும். அதிகபட்ச ஸ்கோர் 144.

 

 

ஜெயவர்த்தனே 20-20

55 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஜெயவர்த்தனே, 1493 ரன்களை குவித்து 31.76 என்ற சராசரியை பராமரித்துள்ளார். 1 சதம், 9 அரைசதங்கள் விளாசியுள்ளார். அதிகபட்ச ரன் 100 ஆகும்.

பயணம் நிறைவு

உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறப்போவதாக இவ்விரு ஜாம்பவான் பேட்ஸ்மேன்களும் அறிவித்திருந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுடன் இன்று இலங்கை பெற்ற தோல்வியால், அவர்கள் பயணம் இன்றோடு முடிவுக்கு வந்தது. பல நாட்டு வீரர்களும், இரு வீரர்களையும் வாழ்த்தி தகவல்களை அனுப்பி வருகின்றனர்.

டெஸ்ட்டில் சங்ககாராவை பார்க்கலாம்

ஜெயவர்த்தனேவை பொறுத்தளவில், ஒருநாள் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், சங்ககாரா இவ்வாண்டு இறுதிவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடுவார். மற்றபடி பல நாடுகளிலும் நடைபெறும் ஐபிஎல் போன்ற உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இவ்விருவரும் ஆட உள்ளனர்.

மூலக்கதை