இந்திய அணி நாளை பச்சை சட்டையை மட்டுமல்ல, 'கறுப்பு சட்டையையும்' சமாளிக்கனுமே..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்திய அணி நாளை பச்சை சட்டையை மட்டுமல்ல, கறுப்பு சட்டையையும் சமாளிக்கனுமே..!

மெல்போர்ன்: இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கிடையே உலக கோப்பை காலிறுதி போட்டி நாளை மெல்போர்ன் கிரிக்கெட் கிரவுண்டில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், மெல்போர்னில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒரு அணி பேட் செய்த பிறகு மற்றொரு அணியும் 20 ஓவர்கள் பந்து வீசினால்தான், டக்வொர்த் லீவிஸ் விதிமுறை கொண்டுவரப்படும். அல்லது மறுநாளைக்கு ஆட்டம் தள்ளி வைக்கப்படும்.

டக்வொர்த் லீவிஸ் விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டால், அது பல நேரங்களில் நன்றாக ஆடும் அணிக்கு விரோதமாகவே சென்றுவிடுவது வழக்கம். வானிலை இலாகாவின் அறிவிப்பால், இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம் ஆட்டம் இரு நாட்களிலும் நடத்த முடியாமல் போனால், அப்போது லீக் ஆட்டத்தில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் சிறந்த அணி கணக்கிடப்படும். அப்படிப் பார்த்தால், வெற்றியை மட்டுமே பெற்று வந்த இந்தியாவே அரையிறுதிக்கு தகுதி பெறும்.

எனவே பச்சை சட்டை, வங்கதேசத்தை மட்டுமல்ல, கரும் மேகச் சட்டையுடன் வரும் மழையையும் நாளை இந்தியா சமாளிக்க வேண்டும்.

மூலக்கதை