இலங்கையிடம் இந்தியா பக்குவமாக செயற்பட வேண்டும்: பி.எஸ்.ஞானதேசிகன்

NEW INDIA NEWS  NEW INDIA NEWS
இலங்கையிடம் இந்தியா பக்குவமாக செயற்பட வேண்டும்: பி.எஸ்.ஞானதேசிகன்

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காகவும், இந்திய மீனவர் பிரச்சினைக்கான தீர்வை கருத்திற்கொண்டும் இலங்கையிடம் இந்தியா பக்குவமாக செயற்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கச்சதீவில் நடைபெறும் புனித அந்தோனியார் திருவிழா, மீனவர் பிரச்சினைக்கான தீர்வு போன்ற விடயங்களை கவனத்திற்கொண்டு இலங்கையை அணுக வேண்டியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இருநாட்டு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் துறை அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்புக்கு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமிழக அரசு அனுமதியளிக்க மறுத்ததால் இந்த சந்திப்பு டிசம்பர் மாத இறுதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக ஞானதேசிகன் மேலும் கூறியுள்ளார்.

மூலக்கதை