உலக கோப்பையில் சம பலத்துடன் இந்தியா-வங்கதேசம்! பயமுறுத்தும் புள்ளி விவரம்!!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலக கோப்பையில் சம பலத்துடன் இந்தியாவங்கதேசம்! பயமுறுத்தும் புள்ளி விவரம்!!

உலக கோப்பையில் முதல் முறை

இந்தியாவும், வங்கதேசமும் இப்போதுதான் முதல் முறையாக உலக கோப்பை காலிறுதியில் சந்திக்கின்றன. இதற்கு முன்பு, லீக் ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் மோதியுள்ளன.

பழிக்கு பழி

இரு அணிகளும் உலக கோப்பையில் இதுவரை 2 முறை மோதியுள்ளன. 2007 உலக கோப்பை லீக் போட்டியில், இந்தியாவை வங்கதேசம் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தது. 2011ல் டோணி தலைமையிலான இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தி பழி தீர்த்தது. ஆக, உலக கோப்பையில் இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதாக இந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அடுத்தடுத்து சதங்கள்

உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக இரு இந்திய வீரர்கள் சதம் அடித்துள்ளனர். வீரேந்திர சேவாக் 175 ரன்களும், கோஹ்லி 100 ரன்களும் விளாசியுள்ளனர். இருவருமே 2011ல் நடந்த போட்டியில்தான் இந்த சதங்களை விளாசினர்.

தல எப்படி?

2007 உலக கோப்பையில், கேப்டனாக இன்றி, களம் கண்ட டோணி, 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆனார். 2011 உலக கோப்பையில், டோணி களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

 

 

அங்கிட்டு யாருமில்ல

வங்கதேச வீரர்களில் யாரும் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்தது இல்லை. 2011ல் தமிம் இக்பால் அதிகபட்சமாக 70 ரன்களை அடித்தார்.

 

 

முதல் போட்டியிலேயே சதம்

2011 உலக கோப்பையில்தான் விராட் கோஹ்லி முதல்முறையாக உலக கோப்பை தொடரில் கால் பதித்தார். முதல் போட்டியிலேயே வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்தார்.

ஓல்ட் இஸ் கோல்ட்

கடந்த உலக கோப்பை தொடரில் மோதியபோது இருந்த 6 வீரர்கள் வங்கதேசத்தில் இந்த உலக கோப்பையிலும் ஆடுகின்றனர். இந்தியாவை பொறுத்தளவில், டோணி மற்றும் கோஹ்லி ஆகியோர் மட்டுமே பழைய அணியில் இருந்தவர்களாகும்.

ஒட்டுமொத்தமாக இந்தியா ஆதிக்கம்

ஒட்டுமொத்தமாக இதுவரை இவ்விரு அணிகளும் 29 ஒரு நாள் போட்டிகளில், சந்தித்துள்ளன.

அதில், இந்தியா 24 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகளில் ரிசல்ட் கிடைக்கவில்லை.

 

 

இங்கு முதல் முறை

ஆஸ்திரேலியாவில், முதல் முறையாக இந்தியா, வங்கதேச அணிகள் மோத உள்ளன.

இப்படி ஆகிபோச்சே

2012 ஆசிய கோப்பையில், வங்கதேசத்துக்கு எதிராக, சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சர்வதேச கிரிக்கெட் சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

மூலக்கதை