8 முறை மோதல்.. ஆளுக்கு "பப்பாதி" வெற்றி.. இது பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா கதை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
8 முறை மோதல்.. ஆளுக்கு பப்பாதி வெற்றி.. இது பாகிஸ்தான்  ஆஸ்திரேலியா கதை!

பெங்களூரு: உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் மொத்தம் 8 முறை மோதியுள்ளன. அதில் ஆளுக்கு நான்கு வெற்றிகளையும், 4 தோல்விகளையும் சந்தித்து சம பலத்தில் உள்ளன.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் காலிறுதிக்கு இரு அணிகளும் முன்னேறியுள்ளன. 3வது காலிறுதிப் போட்டியில், மார்ச் 20ம் தேதி இவர்கள் இருவரும் அடிலைடில் நடைபெறும் போட்டியில் மோதவுள்ளனர்.

உலகக் கோப்பையைப் பொறுத்தமட்டில் இந்த இரு அணிகளும் சம பலத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் 1999 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சந்தித்தன. அதில் ஆஸ்திரேலியா[1] 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தட்டிச் சென்றது.

இதுவரை பாகிஸ்தானும், ஆஸ்திரேலியாவும் மோதிய போட்டிகளின் முடிவுகள் விவரம்:

1975- 73 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி (ஸ்கோர் - 60 ஓவர்களில் ஆஸி. 278-7. பாகிஸ்தான் 53 ஓவர்களில் 205).1979 - 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி. (ஸ்கோர் - பாக். 60 ஓவர்களில் 286-7, ஆஸி. 57.1 ஓவர்களில் 197.)1987 - 18 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி (ஸ்கோர் - ஆஸி. 50 ஓவர்களில் 267-6, பாக். 49.2 ஓவர்களில் 249.)1992 - 48 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி (ஸ்கோர் - பாக். 50 ஓவர்களில் 220-9, ஆஸி. 45.2 ஓவர்களில் 172.)1999 - 10 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி (ஸ்கோர் - 50 ஓவர்களில் 275-8, ஆஸி. 49.5 ஓவர்களில் 265.)1999 - இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி (பாக். 39 ஓவர்களில் 132. ஆஸி. 20.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 133).2003 - 82 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி (ஸ்கோர் - ஆஸி. 50 ஓவர்களில் 310-8, பாக். 44.3 ஓவர்களில் 228.)2011 - 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி (ஸ்கோர்- ஆஸி. 46.4 ஓவர்களில் 176, பாக். 41 ஓவர்களில் 178-6). References^ Topic: ஆஸ்திரேலியா (tamil.oneindia.com)

மூலக்கதை