நாக்-அவுட் தொடங்கும் முன்னாடி, நாக்கு தள்ள வைத்த பெர்பார்மன்ஸ்களை கொஞ்சம் பாருங்க!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாக்அவுட் தொடங்கும் முன்னாடி, நாக்கு தள்ள வைத்த பெர்பார்மன்ஸ்களை கொஞ்சம் பாருங்க!

தோல்வியில்லா அணிகள்

குரூப் ஏவிலுள்ள நியூசிலாந்தும், பி பிரிவிலுள்ள, இந்தியாவும்தான் லீக் ஆட்டங்களில் தோல்வியே காணாத அணிகளாகும். மோதிய 6 போட்டிகளிலும் இவ்விரு அணிகளும் வெற்றியே பெற்றுள்ளன.

வெற்றியே காணாத அணிகள்

பி பிரிவிலுள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏ பிரிவிலுள்ள, ஸ்காட்லாந்து ஆகிய இரு அணிகளும், தங்களது லீக் சுற்றுகளில் ஒரு போட்டியிலும் வெற்றியே பெறவில்லை.

 

 

ஆசிய நாடுகள் அசத்தல்

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நான்கு ஆசிய நாடுகள், உலக கோப்பை கிரிக்கெட்டின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது இதுதான் முதல் முறையாகும். முன்னதாக, 1996ல், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தன.

 

 

ஏகப்பட்ட சதங்கள்

லீக் சுற்றுகளில் மொத்தம் 35 சதங்கள் விளாசப்பட்டுள்ளன. அதில், இலங்கை பேட்ஸ்மேன்கள் மட்டும், 8 சதங்கள் அடித்துள்ளன். ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து ஒரு சதமும் வரவில்லை.

400 ரன்களெல்லாம் ஜுஜுபி

லீக் சுற்றுகளில் 3 முறை, 400 ரன்கள் கடக்கப்பட்டுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 400 ரன்களை கடந்தது. ஆப்கனுக்கு எதிராக ஆஸ்திரேலியா 417 ரன்களை குவித்தது.

அதிகபட்ச ஸ்கோர்

உலக கோப்பை வரலாற்றிலேயே அதிகபட்ச அணி ஸ்கோரை ஆஸ்திரேலியா (417 ரன்கள்) பதிவு செய்துள்ளது. முன்னதாக, இந்தியா 2007 உலக கோப்பையில், பெர்முடாவுக்கு எதிராக குவித்த 413 ரன்கள்தான் அதிகபட்சமாக இருந்தது.

குறைந்த ஸ்கோர்

இந்தியாவுக்கு எதிராக யு.ஏ.இ அணி எடுத்த 102 ரன்கள்தான், லீக் சுற்றில் ஒரு அணி எடுத்த, குறைந்தபட்ச ஸ்கோராகும்.

ஜஸ்ட் மிஸ்

ஜிம்பாப்வே அணியை, அயர்லாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதுதான், மிக குறைந்த ரன் வித்தியாச வெற்றியாகும்.

 

 

பெரிய துரத்தல்

ஸ்காட்லாந்துக்கு எதிராக 319 ரன்களை விரட்டிச் சென்று வங்கதேசம் வெற்றி பெற்றதுதான், லீக் போட்டிகளின் பெரிய ரன் சேஸிங் ஆகும்.

 

 

இரட்டை சதம்

உலக கோப்பையில் முதல், இரட்டை சதத்தை கிறிஸ் கெய்ல் (215 ரன்கள்) ஜிம்பாப்வே அணிக்கு எதிராக குவித்தார்.

முதல் வெற்றி

முதல்முறையாக உலக கோப்பைக்குள் வந்த ஆப்கன், ஸ்காட்லாந்தை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.

சங்ககாரா உலக சாதனை

இலங்கையின் குமார் சங்ககாரா, வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டிகளில் அடுத்தடுத்து 4 செஞ்சுரிகள் அடித்து புதிய உலக சாதனையை படைத்தார்.

ரன் அடிக்கும் எந்திரம்

லீக் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் சங்ககாரா. அவர் 6 போட்டிகளில் ஆடி, 496 ரன்களை விளாசியுள்ளார். பேட்டிங் சராசரி, 124 ரன்களாகும்.

ஒரே போட்டியில் அதிக விக்கெட்

இங்கிலாந்துக்கு எதிராக, 33 ரன்கள் விட்டுக் கொடுத்து, 7 விக்கெட்டுகள் வீழ்த்திய நியூசிலாந்தின் டிம் சவுத்தி, நடப்பு உலக கோப்பையில் ஒரே போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

ஒட்டுமொத்தமாக அதிக விக்கெட்

லீக் போட்டிகளின் முடிவில், மொத்தம் 16 விக்கெட்டுகளுடன், ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க், முதலிடத்திலுள்ளார்.

சிக்சர், பவுண்டரிகள்

தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ், லீக் போட்டிகளில் 20 சிக்சர்கள் விளாசி முதலிடத்திலுள்ளார். 54 பவுண்டரிகள் விளாசி, அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் வரிசையில், சங்ககாரா முதலிடத்திலுள்ளார்.

 

 

4 அரைசதங்கள்

ஜிம்பாப்வே அணியின் சீன் வில்லியம்ஸ் மற்றும் பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக் ஆகியோர், தலா 4 அரை சதங்கள் அடித்து, லீக் போட்டிகளில் அதிக அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

 

 

கஞ்சத்தன பவுலிங்

அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய சாதனைக்கு சொந்தக்காரர் நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் ஆகும். 6 போட்டிகளில் 11 மெய்டன்கள் வீசியுள்ளார்.

இங்கிலாந்துக்கு ஆறுதல் ஹாட்ரிக்

மெல்போர்னில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து பவுலர் ஸ்டீவன் ஃபின் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

எலைட் குரூப்பில் சேர்ந்தார் தவான்

இந்திய அணியில், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலிக்கு அடுத்தபடியாக, ஒரே உலக கோப்பையில், 2 சதங்கள் அடித்த பெருமையை ஷிகர் தவான் பெற்றார்.

நாங்க எப்போதும் கிங்குதான்

உலக கோப்பையில் 6வது முறையாக பாகிஸ்தானை இந்தியா வெற்றி கண்டது. இதுவரை இந்தியா,, தோற்றதில்லை என்ற சாதனையை தக்க வைத்துக் கொண்டது.

என்னா அடி..

ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல், நடப்பு உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் வைத்துள்ள பேட்ஸ்மேனாகும். 4 இன்னிங்சுகளில் அவரது ஸ்டிரைக் ரேட் 190.37ஆக உள்ளது. கிட்டத்தட்ட ஒரு பந்தில் இரு ரன்கள் என்ற வீதத்தில் அவர் ரன் எடுத்து வருகிறார்.

மூலக்கதை