ரிசர்வ் சைட்டை கிரையம் செய்தது செல்லாது! பணம் திருப்பித்தர கோர்ட் உத்தரவு!

தினமலர்  தினமலர்
ரிசர்வ் சைட்டை கிரையம் செய்தது செல்லாது! பணம் திருப்பித்தர கோர்ட் உத்தரவு!

கோவை,:கோவை, பீளமேடு புதுாரில், பொது ஒதுக்கீடு இடத்தையும், ரோட்டையும் மனையாக விற்றது செல்லாது; கிரையம் செய்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க, கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்துக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கோவை, பீளமேடு தொழிற்கூட பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சொசைட்டி சார்பில், 1968ல் பீளமேடு புதுாரில், 7.96 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.
அதில், 104 மனைகள் பிரிக்கப்பட்டு, அரசு மானியம் பெற்று, 96 வீடுகள் கட்டப்பட்டன. மீதமுள்ள இடங்களில் கட்டடம் கட்ட நிதியின்றி, மனையாக விற்கப்பட்டன. இப்பகுதிக்கு ஆர்.கே., மில் 'பி' காலனி என பெயரிடப்பட்டது.மனைகள் விற்பனைலே-அவுட் வரைபடத்தை பொதுமக்கள் ஆராய்ந்தபோது, 30 அடி ரோட்டில், 3 மனையிடம், உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் வழி என்பதால், கட்டடம் கட்ட தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ள இடத்தில், 2 மனை, பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில் ஒரு மனை என, 30 சென்ட் இடங்கள் விற்கப்பட்டிருந்தன.
நில உபயோக மாற்றம் செய்யாமலேயே விற்கப்பட்ட அந்த இடங்களை வாங்கியவர்கள், மாநகராட்சியில் வரைபட அனுமதி பெறாமலேயே வீடு கட்டியுள்ளனர்.கிடைத்தது உத்தரவுஇச்சூழலில், பொது ஒதுக்கீடு இடத்தை மனையாக மாற்றிக்கொள்ள, அரசிடம் ஒப்புதல் கேட்டது, சொசைட்டி. இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமத்தில் விளக்கம் கேட்காமலேயே, சொசைட்டி கோரிக்கையை ஏற்று, வழிபாட்டு தலத்துக்குரிய பொது ஒதுக்கீடு இடத்தை, மனையாக மாற்றிக் கொள்ளலாம் என, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டது.அப்போதும் கூட, 'ரோடுகளையோ, கட்டடம் கட்டக்கூடாத பகுதிகளையோ மாற்றம் செய்யக்கூடாது' என தெரிவித்திருந்தது. இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே, ரோட்டையும், கட்டடம் கட்டக்கூடாத பகுதிகளும் மனையிடமாக மாற்றி, விற்கப்பட்டு இருந்தன. பொது ஒதுக்கீடு இடம் மற்றும், 30 அடி ரோட்டை, 13 மனைகளாக பிரித்து, விற்கப்பட்டுள்ளது.வழக்குக்கு தீர்ப்புஅங்கு வசிப்பவர்களில் துரைராஜ் என்பவர், 'பொது ஒதுக்கீடு இடத்தை மனையாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, சென்னை ஐகோர்ட்டில், 2007ல் வழக்கு தொடர்ந்தார். 12 ஆண்டுகள் நடந்து வந்த இவ்வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதில், 'பொது ஒதுக்கீடு இடம் விற்கப்பட்டது; கிரையம் செய்தது செல்லாது. கிரையம் பெற்றவர்களுக்கு, கிரையம் செய்து கொடுத்த கூட்டுறவு வீடு கட்டும் சங்கம், பணத்தை திருப்பிச் கொடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.நகல் கிடைக்கலையாம்கோர்ட் உத்தரவு தொடர்பாக, பீளமேடு தொழிற்கூட பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சொசைட்டி (கூடுதல் பொறுப்பு) செயலாளர் ரமேஷிடம் கேட்ட போது, ''கோர்ட் உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை. இருந்தால் கொடுங்கள். உயரதிகாரிகளுக்கு தெரிவித்து பதிலளிக்கிறேன்,'' என்றார்.

மூலக்கதை