'சாஹோ' படத்தில் ராம்சரண் முதலீடு ?

தினமலர்  தினமலர்
சாஹோ படத்தில் ராம்சரண் முதலீடு ?

பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் மற்றும் பலர் நடிக்க இந்தியாவின் பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் படம் 'சாஹோ'. இந்தப் படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தை தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத் தயாரிப்பில் நடிகர் ராம்சரண் பத்து சதவீதம் முதலீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் பட்ஜெட் 300 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். அதனால் சில முக்கிய முதலீட்டாளர்களிடமிருந்து பணம் திரட்டியுள்ளனர். படத்தின் லாபத்தில் அவர்களது முதலீட்டிற்கேற்றபடி தருவார்களாம்.

ஏற்கெனவே தன் அப்பா சிரஞ்சீவி நடிக்க 200 கோடி ரூபாய் செலவில் 'சை ரா' படத்தைத் தயாரித்து வருகிறார் ராம் சரண். இந்தப் படத்தை தெலுங்கில் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் வெளியிட உள்ளது. மேலும் அவர்கள் தமிழில் 'பாகுபலி' முதல் பாகத்தையும், தெலுங்கில் ராம்சரண் நடித்த 'ரங்கஸ்தலம், வினய விதேய ராமா' படத்தையும் வெளியிட்டுள்ளார்கள்.

ராம் சரண் 'சாஹோ' படத்தில் முதலீடு செய்துள்ள தகவல் வெளியானதால் அப்படத்திற்கு ராம்சரண், சிரஞ்சீவி ரசிகர்களும் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை