ஜெயம் ரவி ஜோடியாக டாப்சி

தினமலர்  தினமலர்
ஜெயம் ரவி ஜோடியாக டாப்சி

'என்றென்றும் புன்னகை, மனிதன்' படங்களை இயக்கிய அகமது அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக டாப்சி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடந்து வருகிறதாம்.

தமிழில் கடந்த சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்த டாப்சி 'கேம் ஓவர்' படம் மூலம் மீண்டும் வந்தார். அடுத்து இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இனி தமிழில் அவர் தொடர்ந்து நடிக்க உள்ளார் என்கிறார்கள்.

ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தியதால் மற்ற மொழிகளில் நடிப்பதைக் குறைத்திருந்தார் டாப்சி. அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'மிஷன் மங்கள்' ஹிந்திப் படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

மூலக்கதை