சூர்யா 39வது படத்தில் காஜல்அகர்வால்

தினமலர்  தினமலர்
சூர்யா 39வது படத்தில் காஜல்அகர்வால்

ஜெயம் ரவியுடன் நடித்த கோமாளி படத்திற்கு பிறகு இந்தியன் 2வில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இதற்கிடையே அவர் கதையின் நாயகியாக நடித்த பாரிஸ் பாரிஸ் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 39வது படத்திலும் காஜல் அகர்வால் நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு சூர்யாவுடன் மாற்றான் படத்தில் நடித்துள்ள காஜல், சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம் படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை