ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் படம்: கீர்த்தி சுரேஷ்

தினமலர்  தினமலர்
ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் படம்: கீர்த்தி சுரேஷ்

மகாநடி படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கில் தலா ஒரு படத்தில் நடிக்கிறார். அதோடு, ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்கும் மைதான் படத்தில் அவரது மனைவியாக நடிக்கிறார். இப்படத்திற்காக எடையை குறைத்தார் கீர்த்தி சுரேஷ். மும்பையில் இதன் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

இப்படம் குறித்து கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டியில், இந்திய கால்பந்தாட்ட வீரர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாறு கதையில் இந்த படம் உருவாகிறது. இதற்காக கால்பந்தாட்ட பயிற்சி எடுத்து நடிக்கிறார் அஜய்தேவ்கன். நான் அவரது மனைவியாக நடிக்கிறேன். என்றாலும், அவரது வெற்றிக்கு நான் எந்தெந்த வகையில் உறு துணையாக இருக்கிறேன் என்பது போன்ற காட்சிகள் படத்தில் உள்ளது. அதனால் எனக்கும் கதையில் முக்கியத்துவம் உள்ளது. இந்த படம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் படமாகவும், அனைவரும் பார்க்கக்கூடிய கதையம்சத்திலும் தயாராகி வருகிறது என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை