கேரளாவில் கனமழை எதிரொலி: 4 மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் கனமழை எதிரொலி: 4 மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை பெய்துவருவதால் இடுக்கி, மலப்புரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டது.

இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாயினர். மலப்புரம் மாவட்டம் கவளப்பாறையில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 69 பேரும், வயநாடு மாவட்டம் புத்துமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 16 பேரும் சிக்கினர்.

இந்த பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

நேற்று முன்தினம்வரை கவளப்பாறையில் இருந்து 46 உடல்கள் மீட்கப்பட்டன. நேற்று மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டன.

இதையடுத்து இங்கு மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கடந்த 12 நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

கவளப்பாறையில் மேலும் 11 பேரை தேடும் பணி இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இடுக்கி, மலப்புரம், ேகாழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


.

மூலக்கதை