ஆண்டுக்கு 2 படம்: பிரபாஸ் முடிவு

தினமலர்  தினமலர்
ஆண்டுக்கு 2 படம்: பிரபாஸ் முடிவு

ராஜமவுலியின் பாகுபலி, பாகுபலி-2 படங்களில் நாயகனாக நடித்தவர் பிரபாஸ். இந்த படங்களுக்காக 4 ஆண்டுகள் அவர் செலவு செய்தார். அதையடுத்து, தற்போது நடித்துள்ள சாஹோவும், 300 கோடி பட்ஜெட் மெகா படம் என்பதால் இந்த படத்திற்காகவும் 2 வருடங்களாக நடித்து வந்தார்.

ஆனால் இனிமேல் வருடத்திற்கு 2 படங்கள் கொடுக்க திட்டமிட்டிருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் பிரபாஸ். அதோடு, அடுத்தபடியாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் பாகுபலி, சாஹோ போன்ற மெகா படங்களில் நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை