நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக போலி ஆவணம் மூலம் தயாரிப்பாளரிடம் ரூ47 லட்சம் பெற்று மோசடி: திரைப்பட இயக்குநர் மீது போலீசில் புகார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதாக போலி ஆவணம் மூலம் தயாரிப்பாளரிடம் ரூ47 லட்சம் பெற்று மோசடி: திரைப்பட இயக்குநர் மீது போலீசில் புகார்

சென்னை: நடிகர் விஷாலை வைத்து திரைப்படம் எடுப்பதாக போலி கால்ஷீட் மூலம் ரூ. 47 லட்சம் பணம் ெபற்று மோசடி ெசய்ததாக, திரைப்பட இயக்குநர் மீது தயாரிப்பாளர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை விருகம்பாக்கம் வெங்கடேசன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நரேஷ் கோத்தா(32).

தொழிலதிபரான இவர், சினிமா தயாரிப்பாளராக உள்ளார். இவரிடம் திரைப்பட இயக்குநர் வடிவுடையம்மன் என்பவர், தான் நடிகர் விஷாலை வைத்து புதிய திரைப்படம் எடுக்க முடிவு செய்து இருப்பதாக கூறி படத்திற்கு நடிகர் விஷால் கால்ஷீட் கொடுத்தாக ஆவணம் ஒன்றை காட்டியுள்ளார்.

அதை நம்பிய தயாரிப்பாளர் நரேஷ் கோத்தா புதிய படத்திற்கு முதலீடு செய்வதாக உறுதி அளித்து ஒப்பந்தம் போட்டுள்ளார்.

அதன்படி இயக்குநர் வடிவுடையம்மன் என்பவருக்கு கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மொத்தம் ரூ. 47 லட்சம் பணத்தை தயாரிப்பாளர் நரேஷ் கோத்தா கொடுத்துள்ளார்.

பின்னர் சொன்னபடி இயக்குநர், நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பிறகு நடிகர் விஷாலிடம் போடப்பட்ட ஆவணத்தை சரிபார்த்த போது, அது போலியான கால்ஷீட் என்று தெரியவந்தது.

இதையடுத்து இயக்குநர் வடிவுடையம்மனிடம் படத்தை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை திரும்ப பெறுவதாக தயாரிப்பாளர் கூறி கொடுத்த ரூ. 47 லட்சத்தை கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் இயக்குநர் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

அதைதொடர்ந்து சம்பவம் குறித்து திரைப்பட தயாரிப்பாளர் நரேஷ் கோத்தா ேநற்று இரவு விரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் திரைப்பட இயக்குநர் வடிவுடையம்மனிடம் ரூ. 47 மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

.

மூலக்கதை