மதுரை பூச்சியியல் ஆராய்ச்சி மையம் புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

தினகரன்  தினகரன்
மதுரை பூச்சியியல் ஆராய்ச்சி மையம் புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு

மதுரை: மதுரை பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை புதுச்சேரிக்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து பூச்சியியல் ஆராய்ச்சி மையத்தை புதுச்சேரிக்கு மாற்றுவதற்கு தடை விதிக்க கோரி கே.கே.ரமேஷ் மனு அளித்துள்ளார். மதுரையில் இருந்து  பூச்சியியல் ஆராய்ச்சி மையம் மாற்றப்பட்டால் தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளன. கே.கே.ரமேஷ் மனுவை விசாரித்த நீதிபதிகள் பூச்சியியல் மையத்தில் நடைபெறும் பணிகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளார்.

மூலக்கதை