வீரர்களுக்கான விருதுகள் அதிகாரபூர்வ அறிவிப்பு: தமிழக வீரர் உட்பட 32 சாதனையாளர்கள் யார்?....வரும் 29ம் தேதி விழாவில் ஜனாதிபதி கவுரவிக்கிறார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீரர்களுக்கான விருதுகள் அதிகாரபூர்வ அறிவிப்பு: தமிழக வீரர் உட்பட 32 சாதனையாளர்கள் யார்?....வரும் 29ம் தேதி விழாவில் ஜனாதிபதி கவுரவிக்கிறார்

புதுடெல்லி:  நாடு முழுவதும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, அற்புதமான மற்றும் மிகச்சிறந்த செயல்திறனுக்காக வழங்கப்படுகிறது; அர்ஜூனா விருது தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதற்காக வழங்கப்படுகிறது; பதக்கங்களை வெல்ல வழிகாட்டும் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு (2019) மேற்கண்ட விருதுகளுக்கு ஏராளமான பரிந்துரைகள் பெறப்பட்டன.

அந்த பட்டியலை முன்னாள் அர்ஜூனா விருது பெற்றவர்கள், துரோணாச்சார்யா விருது பெற்றவர்கள், விளையாட்டு பத்திரிகையாளர்கள், நிபுணர்கள்,  வர்ணனையாளர்கள் மற்றும் விளையாட்டு நிர்வாகிகள் ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழுக்களால் பரிசீலிக்கப்பட்டன.   விருதுகளுக்கான தேர்வுக் குழு உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி நீதிபதி முகுந்தகம் சர்மா தலைமையில் நடைபெற்றது.

தற்போது, விளையாட்டு வீரர்களுக்கான விருதுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற 29ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 19 சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்குகிறார்.

கேல்ரத்னா விருதுக்கு ரூ. 7. 50 லட்சமும், மற்ற விருதுகளுக்கு தலா ரூ. 5 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அர்ஜூனா விருது பெறுவது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டர் (உடற்கட்டு) பாஸ்கரன் கூறுகையில், ‘‘நான் உலக மற்றும் ஆசிய அளவிலான பாடி பில்டிங் போட்டிகளில் பட்டம் வென்று இருக்கிறேன்.

மத்திய அரசு, பாடி பில்டிங்கை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது 20 ஆண்டு கால கஷ்டத்துக்கு பலன் கிடைத்துள்ளது.

இந்த விருது இளைஞர்களுக்கு இந்த விளையாட்டில் ஈடுபட ஊக்கம் அளிப்பதாக இருக்கும்’’ என்றார்.

.

மூலக்கதை