புராண கதாபாத்திரத்தின் பெயரில் தயாரான புதிய படம்

தினமலர்  தினமலர்
புராண கதாபாத்திரத்தின் பெயரில் தயாரான புதிய படம்

ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் தண்டகன். இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப் படம் உருவாகியிருக்கிறது. தண்டகனின் புதிரான குணசித்திரம் எப்படி இருக்கும்? அதன் மன இயல்பு எத்தகையது என்பதை மையமாக கொண்டு, அந்த குணங்களை உடைய ஒரு கேரக்டரை உருவாக்கி இந்தப் படம் தயாராகியுள்ளது.

அபிஷேக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மனோ சித்ரா, அஞ்சு கிருஷ்ணா என இரு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். ராட்சசன் வில்லன் நான் சரவணன், எஸ்.பி.கஜராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, ஆதவ், ராம், வீரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஷ்யாம் மோகன் இசை அமைத்துள்ளார்.

ராயல் பிலிம் பேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்திருக்கிறார். இதன் கதை திரைக்கதை வசனம் எழுதி கே. மகேந்திரன் இயக்கியிருக்கிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: தண்டகன் என்ற தீய குணம் கொண்ட ஒருவனால் இந்த சமூகத்தில் எத்தகைய மோசமான சம்பவங்கள் நடக்கிறது என்கிற மிக சிக்கலான கதையை நேர்த்தியான திரைக்கதை மூலம் விளக்குகிறது இந்த படம். பார்ப்பவர்களுக்கு ஒரு நிமிடம் கூட சலிப்பு தட்டாத வகையில் மிகவும் விறுவிறுப்பான படமாக உருவாகி உள்ளது. என்றார்.

மூலக்கதை